U R VISITOR NUMBER

Tuesday, 23 July 2013

படிவத்தை நிரப்புங்கள்

எந்த சாதி..?
என்ன மொழி?
எவ்வளவு சம்பளம்?
எத்தனை பேர்?
வீடு வாடகைக்கு விடுபவர்கள் படிவங்களை அச்சிட்டு வைத்துக் கொள்ளாத குறைதான்..
அது சரி..
நீங்க..
எந்த..?

விந்தை மனிதர்

ஒருதனிமனிதர்
ஆங்கிலம் கண்டு அஞ்சி ஒதுங்கிய நம்முள் பலரையும் போன்றவர்
கணினியில் தாமாகவே பலவற்றைக் கற்றுக் கொண்டவர்
களஞ்சியம் என்ற பெயரில் ஓர் அகராதியை உருவாக்கி இருக்கிறார்
பாருங்கள்..
இதைப் பற்றிச் சிலவரிகளில் சொல்ல வேண்டுமானால்
முகப்பிலேயே
தேடிச் சோறு நிதம் தின்று
என்னும் மகாகவியின் வாக்கைக் குறிப்பிட்டிருக்கிறார்.
பொட்டில்அடித்த மாதிரி இருக்கிறது..
வேடிக்கை மனிதர்கள் மத்தியில்
விந்தை மனிதர்

நீங்களும் லேகியம் விற்கலாம்

சிலபேர் சில டானிக்குகளை வைத்திருக்கிறார்கள்.
லேகியங்களைத் தருகிறார்கள்.
இதற்குக் கட்டணம் எதுவும் வாங்குவதுமில்லை.
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தேவையில்லை.
பிரமாதம்டா..அசத்திட்டே..கொன்னுட்டே என்றெல்லாம்
பாராட்டுகிற
சிலபேர் சில டானிக்குகளை வைத்திருக்கிறார்கள்.
லேகியங்களைத் தருகிறார்கள்.
இதற்குக் கட்டணம் எதுவும் வாங்குவதுமில்லை.
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தேவையில்லை.
இவை உண்மையிலேயே பிரமாதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உண்மை..

Sunday, 21 July 2013

ஏன் அப்படி?

உங்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்.
உங்களை இப்போதும்.. வாடா என்று வாஞ்சையோடு அழைக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்?
அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்? பெற்ற பிள்ளைகளையே அவர், இவர் என்று போலிப் பாசாங்கோடு அழைக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்பீர்கள்.
எது நிசம்? எது போலி? ஏன் அப்படி?

Utility Value

i had no furniture in my dwelling.
after a very serious thought i went for purchasing a table and chair. the budget was around Rs.100 -
(Remember.. it was 1980)
road side vendors had displayed their articles.
i made calculations.
instead of buying a table and chair, i opted for a cot.it can also be used as a table. moreover, sleeping would be comfortable. i bargained and got it for Rs.100 - including home-delivery charges.
it was brought on a rickshaw all the way from Kancheepuram to Mamandur  covering a distance of 10 Kms.
We celebrated the possession.
For more than two decades i maintained that with regular coat of protective varnish.
due to transportation difficulties i gifted that cot to a friend
Calculating the utility value, that Rs100- is more than Rs.10,000- to day.

Saturday, 20 July 2013

ஆறு என்ன.. ஐந்து கூட முடியாது..

அன்று அந்த எங்களது வீட்டின் வாங்கிய விலை ரூ700.
விற்ற விலை ரூ900
நிகர இலாபம் ரூ200 என்பீர்கள்.
இன்று அதே ஊரில் (இன்னும் கூடக் கிராமம்தான்)
அந்தக் காசிற்கு ஐந்தே ஐந்து சதுர அடி வெறும் இடத்தைக் கூட வாங்க முடியாது.
இத்தனைக்கும் அன்றைய நிலவரப்படியான எனது கல்வி உதவித் தொகையே ரூ720 .
இன்று 35 ஆண்டுகள் குப்பை கொட்டிய பிறகும் குப்பை கொட்டக் கூடச் சொந்த இடம் இல்லை.
அரும்பாடுபட்டு விலைவாசியை ஏற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

MT or empty

even during my college days, i was unaware of MT.
one of my friend explained what a MT was.
event though it was found convenient, my parents were unable to come to the town for utilizing this facility.
even now the young generation is having no idea of MT
because technology has advanced like that.
when NEFT and RTGS  have become the order of the day,
who cares for MT.
it has become empty.