U R VISITOR NUMBER

Friday, 14 December 2012


தொழில்துறையில் சாதனை படைத்தவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்குகிறார்களா?
ஓ..அண்மையில் கூட பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனரான பாபா கல்யாணிக்குக் கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறார்கள். கான்பூர் ஐஐடியின் வைரவிழாக் கொண்டாட்டங்களையொட்டி இந்தப் பட்டமளிப்பு நடந்திருக்கிறது. ஃபோர்ஜிங் தொழிலில் பாரத் ஃபோர்ஜ் நிறுவனத்தை உலகத் தரம் கொண்டதாக உயர்த்தியதற்காக இந்தப் பாராட்டு.

அமெரிக்காவில் இருந்து இங்கே வந்து மரம் பற்றிப் பயிற்சிஅளிக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அது பற்றிச் சொல்ல முடியுமா?
அமெரிக்காவில் இருந்து கடின வகை மரங்களை உலகின் பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறார்கள். மரத் தடிகள், கழிகள், பலகைகள் என்று பல விதத்தயாரிப்புகளை அனுப்புகிறார்கள். அவற்றைப் பயன்படுத்தும் விதம், சிறப்பியல்புகள் போன்றவற்றை விளக்கி இந்தியாவின் முக்கிய நகரங்களில் பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகளை நடத்தி இருக்கிறார்கள். மரப் பொருட்களுக்கான தர நிர்ணயங்கள் பற்றிய விவரங்களையும் அளிக்கிறார்கள். இந்தியாவில் மரப் பொருள் தயாரிப்பு, விற்பனை, பராமரிப்பு போன்ற துறைகளில் உள்ளவர்களுக்கு இது பெரிதும் பயனுள்ள ஒன்று.
அமெரிக்கன் ஹார்ட் உட் எக்ஸ்போர்ட் கவுன்சில் என்ற அமைப்பும் நேஷனல் ஹார்ட் உட் லம்பர் அசோசியேஷன் என்ற அமைப்பும் இணைந்து இத்தகைய கருத்தரங்குகள், பயிற்சிகளை நடத்துகிறார்கள்.

No comments:

Post a Comment