வியாழன், 31 ஜனவரி 2013
மன்னா..இளவரசரை எந்த
குருகுலத்தில் சேர்ப்பது,?
கண்டிப்பாகக்
கம்ப்யூட்டர் கற்றுக் கொடுக்கும் இடத்தில்தான் சேர்க்க வேண்டும் அமைச்சரே..
தடபுடலான வரவேற்பு
விழா ஏற்பாடுகளெல்லாம் நடக்கின்றனவே.. என்ன விசேஷம்?
மன்னர் புறமுதுகிட்டு
ஓடிவருவது இது ஆயிரமாவது முறையாம்.. அதுதான்..
மன்னா நமது
மதில்சுவர்களைப் பலப்படுத்தும் வேலைகள் எதிரி நாட்டானுக்குத் தெரிந்துவிட்டது..
எப்படி தளபதி?
அவன் ஜிபிஎஸ் எல்லாம்
வைத்திருக்கிறான் மன்னா..
போர்களைப் பொருத்தவரை
தன் கையே தனக்குதவி என்பதில் மன்னருக்கு உடன்பாடு இல்லை..
ஏன்?
தன் காலே தனக்குதவி
என்பார்..
மன்னா... தாங்கள்
அண்டை நாடுகளுடன் சமாதானத்தையே பெரிதும் விரும்புவது ஏன்?
யாரால ஓட முடியுது
தளபதி? அதனாலதான்...
மன்னா..இளவரசர்
ஓட்டப் பந்தயத்தில் முதலிடத்தில் வந்திருக்கிறார்.
பின்னே..அவன் யாரோட
வாரிசு?
மன்னா தங்கள்
வீரத்தைப் புகழ்ந்து பாடி இருக்கிறேன்.
தலைப்பு என்ன புலவரே?
புறமுதுகாற்றுப்படை..
மன்னா ... நாட்டில்
போர்க்களங்களே இல்லாமல் போய்விடும் போலிருக்கிறது..
ஏன் தளபதி..
எல்லா இடங்களையும்
மனை போட்டுவிடுகிறார்கள்...
ஒரு புள்ளிவிவரம் அதிர்ச்சி
அளிப்பதாக உள்ளது..
என்ன அமைச்சரே..
நமது படைவீரர்களைக்
காட்டிலும் அந்தப்புரப் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது..
மன்னர் போர்க்களத்தில
கூட சீரியல் பார்க்கறார்..
என்ன சீரியல்?
மான் ஓட.. மயில்
ஓடத்தான்..
என்ன புலவரே இது.?
5656432879?
என் பாடலுக்கான
பரிசுத் தொகையை இந்த எண்ணிற்கு ஆர்டிஜிஎஸ் செய்துவிடுங்கள் மன்னா..
தலைவர் எதுக்குத்
தொடைகளுக்கு அதிகப்பயிற்சி எடுத்துக்கறார்..?
யாரும் அவரைத் தொடை
நடுங்கின்னு சொல்லிடக் கூடாதாம்..
தலைவருக்குப் பட்டம்
கொடுத்தது தப்பாப் போச்சு..
ஏன்?
பட்டம் மட்டும் கொடுத்தாப்
போதுமா..மாஞ்சா நு ல் யார்
தர்றதுங்கறார்..
ஒரு தவறு
நடந்துவிட்டது மன்னா..
என்ன தவறு?
வாளை உறையில்
போடுங்கள் என்று தாங்கள் சொன்னதை நமது வீர ர்கள் கடையில் போடுங்கள் என்று சொன்னதாக
எண்ணிப் பழைய இரும்புக் கடையில் போட்டுவிட்டார்கள் மன்னா...
No comments:
Post a Comment