U R VISITOR NUMBER

Saturday, 9 February 2013

நண்பர் பாரி கேட்காமலே சொன்னவை

நான் எதை எல்லாம் விரும்பினேனோ அவை எல்லாவற்றையுமே என்னால்அடைய முடிந்திருக்கிறது. இதற்கு என்னிடம் ஏதோ மாய மந்திர சக்தி இருப்பதாக யாரும் எடுத்துக் கொள்ளத் தேவையில்லை.
ஒரு வகையில் இது பேராசை என்று கூடச்  சொல்லலாம் ஆனால் இது ஒவ்வொருவருக்கும் அவசியம் தேவையான பேராசை என்றுதான் பரிந்துரைப்பேன்.
விரும்பியது எல்லாவற்றையும் பெறுவதற்கு என்ன வழி?
நாம்  யாரைப் பின்பற்ற நினைக்கிறோம் என்பதை முதலில் முடிவு செய்து கொள்ள வேண்டும். எனக்குப் பிடித்த தலைவர் காந்தியடிகள்தான். அவர் முதன் முதலாக அகிம்சை என்ற ஒரு கருத்தைக் கொண்டு ஆதிக்கம் மிகுந்த பிரிட்டிஷ் பேரரசையே வெற்றி கொள்ள முடியும் என்று காட்டியவர். அவருடைய உள்ளத்தில் அப்படியொரு கரு்தது உருவாகி இருந்ததை  அவர் யாரிடமாவது சொல்லி இருந்தால் இதெல்லாம் வேலைக்கு ஆகாது என்றுதான் இகழ்ந்திருப்பார்கள்.
எனக்குள்ளும் சில சிந்தனைகள் தோன்றும். அவற்றை அப்படியே நடைமுறைப்படுத்த நல்ல புத்தகங்களைப் படிக்க முடிந்தது. தன்னம்பிக்கை ஊட்டும் எபுத்தாளர்கள் வரிசையில் அப்துல் றகீம் பற்றிச் சொல்வார்கள். எனக்கு எம்.எஸ் .உதய மூர்த்தி அவர்களை மிகவும் பிடிக்கும். அப்புறம் பா. இரா.
இவர்களது எழுத்துக்கள் எல்லாம் நமக்கு முன்பு நேரில் யாரோ நின்று கொண்டு கையைப் பிடித்து அழைத்துச் செலவ்து போன்ற ஓர் ஒட்டுணர்வை வளர்க்கும்.
நாம் எதை நினைத்தாலும் அதை அடைய முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டும். இன்று இருப்பதைக் காட்டிலும் இன்னும் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்பது என் விருப்பம். அம்பானி, வால்மார்ட் அளவுக்கு வளர் வேண்டும் என்று இலட்சியம் வைத்திருக்கிறேன்.
கெட்பவர்கள் கேலி செய்வார்கள். ஆனால் நினைத்தது நடக்கும் என்பதில் மட்டும் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. யாரிடம் எந்த நல்ல யோசனை கிடைத்தாலு்ம் அதைச் செயல்படுத்துகிறேன்.
எளியதோர் எடுத்துக்காட்டைச் சொல்லலாம். என்னிடம் வேலைக்கு வருகிறவர்கள் ஆர்வத்தேர்டு வந்து விடுமுறை எடுக்காமல் வேலை செய்ய வேண்டுமானால் அவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டத்தை அறிமுகம் செய்தேன். அவர்களுக்கும் பாதிப்பு இல்லாமலும் எனக்கும் குறித்த நேரத்தில் வேலை ஆகும் விதத்திலும் பல ஊக்குவிப்பு நடைமுறைகளை அறிமுகம் செய்திருக்கிறேன்.
வைரமுத்துவை ஒரு முறை யாரோ கேட்டார்கள். இளையராஜாவு்ட்ன் இணையாவிட்டால் உங்களது திறமை வெளிப்பட்டிருக்காதே என்று. அதற்கு அவர் சொன்னார், நான் என் திறமை மேல் நம்பிக்கை வைத்திருக்கிறேன். என்னால் வேறு யாருக்கும் பாதிப்பு இருக்காது. அதே நேரத்தில் என் வளர்ச்சியை ஊக்குவிக்க என் திறமை முபுவதையும் பயன்படுத்துவேன் என்று.
இப்பதெ்தான் யாரோ எங்கோ எப்போதோ எதற்காகவோ சொன்ன சில சொற்கள் நமக்கு ஏதோ ஒரு விதத்தில் பயன்படும். நான் இதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.
என் தாயார் பலமுறை கூறுவார்கள். நமது நிறுவனத்திற்கு நல்ல  விளம்பரமாக அமைய நாம் ஒவ்வோர் ஆண்டும் காலண்டர் அளித்தால் என்ன என்று கேட்பார்கள்.
நோக்கம் என்னவோ விளம்பரப்படுத்துவதுதான். ஆனால் அதன் பலன் எந்த அளவுக்கு உணரப்படும் என்பதில் நான் கவனமாக இருந்தேன். பத்து ரூபாய் விலையில் ஒரு கைப் பை அச்சிட்டு அளித்தேன். அதுவும் எப்படி?
புத்தாண்டு அன்பளிப்பு உங்களுக்காகக் காத்திருக்கிறது. நேரில் வந்து வாங்கிப் போகவும் என்று எனது வாடிக்கையாளர்களுக்குக் கடிதம் எழுதினேன். அது ஒரு தொடர்பை உருவாக்கியது, வளர்த்தது. ஊக்குவி்த்தது. காலண்டர் கொடுப்பதைக் காட்டிலும் இதில் உள்ள பயன்களை என் தாயாரிடம் விளக்கினேன்.
எனது முன்னேற்றத்திற்கு நான் ஒருவன் மட்டுமே காரணம் என்று சொல்ல மாட்டேன். செங்கிஸகான் எப்படி மாபெரும் பேரரசை உருவுர்க்க முடிந்தது என்று கேட்டால் அதற்கு அவனது சகோதரர்கள் ஒற்றுமையாக இருந்து உதவினார்கள் என்பார்கள்.
அதுதான என் விசயத்திலும் நடக்கிறது. ஒன்றுபட்ட ஒத்துழைப்பைப் பெறுகிறேன். குடும்பத்தில் எல்லாரும் ஒரே நோக்கத்திற்காக உழைக்கிறோம். நான் சுயு சரிதம் எழுதும் அளவக்குப் பெரிதாகச் சாதித்துவிடவில்லை. ஆனால் என் கதை பொருளியல் சார்ந்ததாகத்தான் இருக்கும்.
ஒரு மனிதன் வாழும்போதும் அதற்குப் பிறகும் ஆறடி இடம் போதும். அதற்கு மேல் அவன் தேடுவது எல்லாமே சமூக நலனுக்கானதாகத்தான் இருக்கும். நானும் அந்த இலக்கை நோக்கித்தான் பயணிக்கிறேன்.
அதை அடைவேன் என்று உறுதியாக நம்புகிறேன்.
காரணம்
எனக்குரிய வழிகாட்டிகளைத் தேர்ந்தெடுக்கிறேன்.
ஆலோசனைகளை வரவேற்கிறேன்.
செயல்படுத்துகிறேன். எதற்கும் ஒரு பதிவு அவசியம் என்பதை உணர்கிறேன். இதோ இந்தப் பதிவை வெளியிட்டதைப் போல..
நீங்களும் வெற்றி பெற வேண்டுமா? உங்கள் நலனில் அக்கறை கொண்டவர்களின் வார்த்தைகளைக் கேளுங்கள். உங்களுக்குப் பக்க பலமாக இருப்பவர்களைப் பெருக்கிக் கொள்ளுங்கள்.
நீங்கள் எதை நினைத்தாலும் நடக்கும்.

1 comment:

  1. சின்ன சின்ன நுனுக்களை அருமையாக கூறி உள்ள பதிவு
    இராம.அறிவு

    ReplyDelete