U R VISITOR NUMBER

Friday 14 December 2012

தடவிவிட்டால் போதும்..
சுவர்களின் மீதான பூச்சின் பிடிமானம் உறுதியாக இருக்க வேண்டும். நீண்ட காலம் உழைக்க வேண்டும். இப்படித்தான் எதிர்பார்ப்போம். இதற்கு வழக்கமாகப் பின்பற்றப்படும் உத்திகள் என்னென்ன?
முதலில், பலகை அடிக்கப்பட்டிருந்த இடங்களில் எல்லாம் படிந்திருக்கக் கூடிய எண்ணெய்க் கறை முதலியவற்றைச் சுத்தமாக நீக்க வேண்டும். இதற்கு நிறைய நேரம் ஆவதோடு கூலியும் அதிகமாக ஆகும்.
ஷட்டரிங் பலகையை அப்புறப்படுத்தியபின் அந்த இடத்தில் உளியால்  கொத்திப் பொழிய வேண்டும். இதற்கு ஒவ்வொன்றும் 4 முதல் 5 மி.மீ ஆழம் கொண்ட பள்ளங்களை ஏற்படுத்த வேண்டும். சதுர அடிக்கு 50 என்ற எண்ணிக்கைக்குக் குறையாமல் இபபடிச் செதுக்கியாக வேண்டும்.
இப்படியெல்லாம் பூச்சுக்குத் தேவைப்படும் பிடிமானத்தை ஏற்படுத்த வேண்டி இருக்கிறது. அப்படியே செய்தாலும் கூட இது மிகவும் உறுதியானதாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை. பூச்சின் கனம் 8 மி.மீக்கு மேல் போகுமானால் பிடிமானம் அவ்வளவு உறுதியாக இருக்கும் என்று சொல்வதற்கில்லை.
உளியால் கொத்தி எடுக்கும்போது கான்கிரீட் பரப்பிற்குச் சேதம் ஏற்படுவதும் இயற்கை. பல ஆட்களைக் கொண்டு நீண்ட நேரம் கொத்தி எடுக்க வேண்டும்.வேலைகளைச் சீக்கிரம் செய்து முடிக்க முடியாது.
என்னதான் தரமான கலவையைப் பயன்படுத்தினாலும் பூச்சு பெயர்ந்து விழுவது பெரும் குறையாகத் தோன்றும்.
இப்போது இந்தச் சிக்கல்களை எல்லாம் போக்கும் விதத்தில் செயின்ட் கோபெய்ன் நிறுவனம் ஜிப்ராக் பாண்ட் இட் என்ற பூச்சுப் பொருளை அறிமுகம் செய்திருக்கிறது.
இதைப் பயன்படுத்தினால் கான்கிரீட் பரப்பிற்கு எந்தச் சேதமும் ஏற்படாது. ஒரே ஒரு கோட் அடித்தாலே போதும். பூசபபட்ட இடம் பச்சை நிறமாகத் தோற்றம் தரும். இதனால் எந்தெந்த இடங்களில் பூசி இருக்கிறோம் என்பதைத் தெரிந்து கொள்வது எளிது.
இருபத்து நான்கு மணிநேரத்திற்குள் ஜிப்ராக் உலர்ந்துவிடும். இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவதால் இயந்திரத் தன்மை கொண்ட பிடிமானமும் ஏற்படும். வேதிப் பண்புகளால் ஆகிய பிடிப்பும் உறுதி செய்யப்படும்.இவ்வாறு இரண்டு விதங்களில் உறுதியான பிடிப்பு ஏற்படுகிறது. இரண்டாவது நாள் தொடங்கி அடுத்த பத்து நாட்கள் வரை பூச்சு வெலைகளைத் தொடரலாம்.

No comments:

Post a Comment