U R VISITOR NUMBER

Sunday 30 June 2013

இனிய மனிதர்..4


வேறு ஒரு வேலையாகத் திருநரைய10ர் செல்ல வேண்டி இருந்தது. பக்கத்தில்தான் நாச்சியார்கோவில் என்பது வரை தெரியும். சந்திக்க வேண்டி இருந்தவரைச் சந்தித்து முடித்தபி;ன் சி.இரா வைப் போல் பார்ப்போம் என்று நினைத்திருந்தேன்.
யாரும் நம்ப மாட்டார்கள். நாங்கள் பேசிக் கொண்டிருந்த அதே இடத்திற்குத் தற்செயலாக வந்து நின்றார் சி.இரா. எதிர்பாராத சந்திப்பு. இன்ப அதிர்ச்சி. ஊரைச் சுற்றிக் காட்டினார். அந்த ஊரில் பித்தளைத் தொழில் நடைபெறும் விதத்தைச் சுட்டிக் காட்டினார். அதன் வளர்ச்சிக்குத் தம்மால் இயன்ற பணிகளை எப்படியெல்லாம் நிறைவேற்றினார் என்று விளக்கினார்.
ஊர்க்காரர்கள் அவருக்கு அளித்த வரவேற்பும் மரியாதையும் அவர் எப்படிப்பட்ட மனிதர் என்பதற்குக் கட்டியம் கூறின.  இந்த மனிதர்தான் இந்தோனேசியா சென்றிருக்கிறார். மலேசிய மண்ணைத் தொட்டிருக்கிறார். இந்தியக் கை வினைப் பொருட்களின் மதிப்பை எங்கெங்கோ பரப்பி இருக்கிறார்.
வட இந்தியாவில் ஜகாத்ரிää மொராதாபாத் ஆகிய இடங்களை எல்லாம் அடுத்த தெருவுக்குச் சென்று வருவது மாதிரிப் பயணித்திருக்கிறார். அந்த ஊர்க்காரர்களின் பிரதிநிதியாக அயல்நாடுகளுக்குச் சென்று வந்திருக்கிறார். அந்த அனுபவங்களைக் கேட்டால் இன்றைக்கெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அதற்கு முன்..

No comments:

Post a Comment