U R VISITOR NUMBER

Friday 14 December 2012

நில நடுக்கத்தை நினைத்து நடுங்க வேண்டாம்
நில நடுக்கம் ஏற்படக் கூடிய பகுதியில் உங்கள் கட்டுமானத்தை அமைக்க வேண்டி இருக்கிறதா? புள்ளி விவரங்கள் உங்களைப் பயமுறுத்தக் கூடும். ஆமாம். ஆண்டொன்றுக்கு நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உங்களைத்  திகிலடையச் செய்யும். உலகம் முழுவதும் கடந்த முப்பது ஆண்டுகளில் பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீங்கள் வசிக்கும் பகுதி 3,4,5 என்ற தர வரிசைப்படியான நிலநடுக்க வாய்ப்பு ஏற்படக் கூடிய இடமாக இருக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டிய ரீபார் கம்பிகள் தாதுவிலிருந்து முதல் உருக்கிலேயே தயாரிக்கப்பட்ட கட்டிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்டவையாக இருக்க வேண்டும்.
இநதியத் தர நிர்ணய விதிமுறை 13920 இன்படியான கம்பிகளையே தேர்வு செய்ய வேண்டும். கம்பியின் நீட்சித் தன்மை சீராக 18விழுக்காடு அளவில் இருப்பது முக்கியம். கம்பிகளில் இடம் பெற்றுள்ள கந்தகம் மற்றும் பாஸ்பரத்தின் அளவு மிகவும் குறைந்த அளவில் இருக்க வேண்டும். 0.070 என்ற விழுக்காடு இருப்பது விரும்பத் தக்கது.
செஞ்சிவப்பு நிலையிலிருந்து சட்டென்று குளிர்விக்கப்பட்டு விறைப்பூட்டப்பட்ட கம்பிகளைப் பயன்படுத்துவது நல்ல தேர்வாக அமையும். இம்மாதிரியான கம்பிகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டடத்தை உருவாக்கினீர்கள் என்றால் நீங்கள் நில நடுக்கத்தை நினைத்து நடுங்கவே வேண்டியதில்லை.

1 comment:

  1. நில நடுக்கத்தை நினைத்து நடுங்க வேண்டாம் - heading should be bold font

    ReplyDelete