U R VISITOR NUMBER

Showing posts with label kungumam. Show all posts
Showing posts with label kungumam. Show all posts

Thursday, 24 January 2013


அரண்மனை வாயில்ல எதுக்காக மன்னர் ஏடிஎம் வைக்கச் சொல்றார்?
புகழந்து பாடற புலவர்களுக்குக் கையால காசு கொடுத்துக் கட்டுபடி ஆகலியாம்..
-சுப.தனபாலன்

மன்னர் இப்பல்லாம் அந்தப்புரத்துக்கு வர்றதையே குறைச்சுக்கிட்டாராமே..
ஆமா..அவருக்கு நெட்ல பார்க்கவே நேரம் போதலியாம்..
-சுப.தனபாலன்

மன்னா..ஆபத்து..
என்ன அமைச்சரே?
நீங்க கப்பப்பணத்துக்குக் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆயிடுச்சாம்..
-சுப.தனபாலன்


“படத்  தயாரிப்பாளர்கள் காலத்தை எப்படிப் பிரிக்கிறார்கள்?“
“இடைச் சங்க காலம், தொடைச் சங்க காலம், உடைச் சங்க காலம்னுதான்..“
                                           -சுப.தனபாலன்

“ஊரே சிரிக்குது..“
“ஏன்?“
“நீங்க சிரிப்புத் துணுக்கு எழுத ஆரம்பிச்சதைக் கேள்விப்பட்டுத்தான்.“
                                           -சுப.தனபாலன்
”நில அபகரிப்பு வழக்கில உள்ள போன தலைவர் கடிதம் எழுதி இருக்கார்..”
”என்னன்னு?”
”நிலம்.நிலம் காண அவான்னுதான்..”  
                                                                     -  சுப. தனபாலன்



”தலைவர் தன்னோட மோசடியை இந்த அளவுக்கு விரிவுபடுத்தி இருப்பார்னு நினைச்சுக் கூடப் பார்க்கல..”
”என்னாச்சு?”
” நிலா அபகரிப்பு வழக்குப் போட்டிருக்காங்க”
                                                                -  சுப. தனபாலன்