U R VISITOR NUMBER

Tuesday, 29 January 2013

நாள்
28-01-2013
திருச்சி - பட்டுக்கோட்டை விரைவு வண்டி அதிகக் கட்டணம்
திடீரென்று நடு வழியில் டீசல் இல்லாமல் நின்று போகிறது. பயணிகள் ஆத்திரம். ஓட்டுநர் தகவல் அளிக்கிறார். அதிகாரிகள் மேலதிகாரியிடம் பேசச் சொல்கிறார்கள். கூடுதலாகத்  திருச்சிக்கும் போய் வா என்று கட்டாயப்படுத்தினீர்கள். எரிபொருள் போதாது என்று நான் சொன்னதை ஏற்கவில்லையே என்கிறார் ஓட்டுநர். மாற்று வண்டி எப்போது வரும் ? தெரியாது.
வேறு என்ன செய்ய முடியும்? சாமான்யர்கள் கா.......த்திருக்க வேண்டியதுதான்.

Sunday, 27 January 2013

Saturday, 26 January 2013

அண.மையில் திண்டுக்கல்லைச் சுற்றி ஒரு சிறு உலா. எந்த ஊருக்கும் வழிகாட்டிப் பலகைகள் முறையாக இல்லை. குறிப்பாகச் சாலைச் சந்திப்புகளில். ஓரிடத்தில் GURVE AHEADஎன்று எழுதி வைத்திருக்கிறார்கள்.

Thursday, 24 January 2013

அரசுக்கு யோசனை
இந்த வழித்தடத்தில் இந்தப் பேருந்திற்கு இவ்வளவு கட்டணம் என்பதைப் பேருந்திலேயே எழுதி வைத்தால் பயணிகளுக்கும்நடத்துனர்களுக்குமிடையேயான சில்லறைத் தகராறுகளைத் தவிர்க்கலாமே?
வண்டியை மாற்ற வேண்டி வரும் என்பவர்கள் அட்டையில் எழுதித்தொங்கவிட்டால் போகிறது.
வங்கிகள் பெரிய பேருந்து நிலையங்களில் சில்லறை வழங்கும் இயந்திரங்களை நிறுவினால் என்ன?
மரம் வளர்க்கும் வீடுகளுக்குப் பத்திரப் பதிவில் சலுகை காட்டினால் என்ன?

அரண்மனை வாயில்ல எதுக்காக மன்னர் ஏடிஎம் வைக்கச் சொல்றார்?
புகழந்து பாடற புலவர்களுக்குக் கையால காசு கொடுத்துக் கட்டுபடி ஆகலியாம்..
-சுப.தனபாலன்

மன்னர் இப்பல்லாம் அந்தப்புரத்துக்கு வர்றதையே குறைச்சுக்கிட்டாராமே..
ஆமா..அவருக்கு நெட்ல பார்க்கவே நேரம் போதலியாம்..
-சுப.தனபாலன்

மன்னா..ஆபத்து..
என்ன அமைச்சரே?
நீங்க கப்பப்பணத்துக்குக் கொடுத்த காசோலை பவுன்ஸ் ஆயிடுச்சாம்..
-சுப.தனபாலன்


“படத்  தயாரிப்பாளர்கள் காலத்தை எப்படிப் பிரிக்கிறார்கள்?“
“இடைச் சங்க காலம், தொடைச் சங்க காலம், உடைச் சங்க காலம்னுதான்..“
                                           -சுப.தனபாலன்

“ஊரே சிரிக்குது..“
“ஏன்?“
“நீங்க சிரிப்புத் துணுக்கு எழுத ஆரம்பிச்சதைக் கேள்விப்பட்டுத்தான்.“
                                           -சுப.தனபாலன்
”நில அபகரிப்பு வழக்கில உள்ள போன தலைவர் கடிதம் எழுதி இருக்கார்..”
”என்னன்னு?”
”நிலம்.நிலம் காண அவான்னுதான்..”  
                                                                     -  சுப. தனபாலன்



”தலைவர் தன்னோட மோசடியை இந்த அளவுக்கு விரிவுபடுத்தி இருப்பார்னு நினைச்சுக் கூடப் பார்க்கல..”
”என்னாச்சு?”
” நிலா அபகரிப்பு வழக்குப் போட்டிருக்காங்க”
                                                                -  சுப. தனபாலன்

Tuesday, 8 January 2013

can somebody help me type bamini font in pagemaker?
keep your entire career records in a single Excel sheet. Want to know more?