U R VISITOR NUMBER

Saturday 9 February 2013

பயணங்கள் ?
பட்டுக்கோட்டையிலிருந்து மதுரைக்குச்  சுமார் 160 கிலோமீட்டர். மாலை 5.15க்கு ஏறி அமர்ந்தால் மதுரை மாட்டுத்தாவணியை அடைய இரவு பத்தே முக்கால். அதாவது ஐந்தரை மணி நேரப் பயணம். கட்டணம் 95 ரூபாய். விரைவு வண்டியின் இலக்கணம் இதுதான்.
அதிகக் கட்டணம். குறைந்த வேகம். இடுக்கிப் பிடித்து அமர வேண்டிய இருக்கை. அறந்தாங்கியில் அரை மணி நேரம். காரைக்குடியில் அரைமணி நேரம் காத்திருப்பு.
பட்டுக்கோ்ட்டை - மதுரை ஒரே பயணச் சீட்டு வாங்கி இருந்த ஒரே ஒரு ஏமாளியும் நானே. காரைக்குடியில் ஒரு மூதாட்ழ என்னப்பா யாரையுமே காணோம். மதுரை போகுமா என்று கேட்டது உச்சக் கட்டக் கேலி.
அது தவிர வழியில் ஏதோ ஒரு விபத்து. முன் பின் போக வழியில்லை.
ஆத்திரம் கண்ணை மறைக்கும். ஆனாலும் இருபதடி தொலைவில் ஏதோ ஒருமனித உயிர் நொடியில் பறி போயிருந்தது.  காவலர்கள் வேகமாக வந்து வேகத் தடைகளை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.இனி வண்டி எப்போது கிளம்புமோ தெரியாது.
வேறு வழியின்றிக் காத்திருக்கையில் சில நிமிடங்களில் இரத்தச் சேற்றின் ஊடாக மெல்ல நகர்ந்து வேகம் எடுத்தது. குடித்து விடடு ஓட்டி இருக்கக் கூடும் என்று சிலர் முணுமுணுத்தார்கள்.
தலை திரும்பிக் கிடந்த மஞ்சள் நிற இரும்புக் குதிரை ஒன்றை அரைக்கால் சட்டை அணிந்த ஒருவன் எட்டி உதைத்தான். ஒருவேளை இதுதானே ஓர் உயிரைப் பறித்தது என்கிற கடுப்பாக இருக்கலாம்.
வண்டி குடை சாய்ந்தது. துாக்கி நிறுத்த நாலு பேர் தேவைப்பட்டார்கள்.
அதெல்லாம் போகட்டும்..
எதற்காக அத்தனை பேர் ஏதோ தேர்இழுக்க வடம் பிடிப்பவர்களைப் போல் காத்துக் கொண்டு  சாலை நெடுக வேடிக்கை பார்த்தார்களோ புரியவில்லை. இரத்த மையில் பரபரப்புச் செய்திகள் சாலைக் கறுப்புக் காகிதத்தில். மக்கள் எதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்?


No comments:

Post a Comment