U R VISITOR NUMBER

Sunday 3 February 2013

அரசுக்கு யோசனை
ஓர்இருக்கை வரிசைக்கு ஒரு சன்னல் என்று பேருந்துகளில் வடிவமைத்தால் பல தகராறுகள், நோய்த் தாக்குதல்களைத் தடுக்கலாமே.
குளிர் காலத்தில் சன்னலைத் திறந்து வைத்துக் கொள்வது, எச்சில் துப்புவது என்று சக பயணிகள் தொல்லைப்படுத்தப்படுவதைத் தவி்ர்க்கலாம்.

தொழில்நுட்பம் எவ்வளவோமுன்னேறி இருக்கிறது. அடுத்த நிறுத்தம் எது என்று அறிவிக்க வழி செய்தால் என்ன?

விரைவுப் பேருந்துகள் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் போகின்றன. அடுத்துவரும் தனியார் பேருந்துகள் சாதாரணக் கட்டணத்தில் வாரிச் சுருட்டிக் கொண்டு செல்கின்றன. இழப்பு எப்படி வருகிறது என்பது தெரிகிறதோ?

பேருந்துகளில் ஒலிஒளிபரப்புத் தொல்லைகளைத் தடை செய்வது ஒலியால் ஏற்படும் மாசுவைக் குறைக்கும். இதில் தனியார் அலைபேசிகளையும் சேர்த்துத் தடைவிதிக்கலாம்.

பயணிகளிடம் இனிமையாகப் பழகும் நடத்துநர்களுக்குச் சிறப்புப் பதக்கம் அளித்து அவர்கள் பணிநேரத்தில் அதனைப் பெருமையுடன்அணிந்து கொள்ள வழி செய்யலாம்.

No comments:

Post a Comment