U R VISITOR NUMBER

Sunday 10 February 2013

காரைக்குடியிலிருந்து பட்டுக்கோட்டைக்குப் பயணச் சீட்டு வாங்கிக் கொண்டு அமர்ந்திருககிறேன். விரைவு வண்டி. 48 ரூபாய் கட்டணம்.
அறந்தாங்கி வருகிறது.
அவசரமாப் போக வேண்டி இருக்கறவங்க எல்லாம் அந்த வண்டிக்குப் போங்க.. நாங்க டயர் ஏத்திக்கிட்டுப் போகணும்.. முக்கா மணி நேரம் ஆகும் என்கிறார் நடத்துனர்.
வழக்கமாய் டீ , காபி சாப்பிடப் பத்து நிமிடம் நிறுத்துவதாகச் சொல்வார்கள்.
இது என்ன புதுவகை நிறுத்தம்? வேலை நிறுத்தம்?
என்னைப் போல் நெடுஞ்சீட்டு வாங்கியவர்களின் கதி? யாராவது தீர்வு சொல்லுங்கள் சுவாமி.

ஏழாயிரம் கட்டிப் பயணம் செய்யும் மகளை அனுப்பி வைக்க வந்த இடத்தில் பத்தடி தள்ளி உள்ளே அமர ரூ45 கட்டணமாம். அதுவும் சில மணித் துளிகளுக்கு. இந்த 45 ரூபாயைக் கறக்காவிட்டால் எந்த விமானத் தளம் குடி முழுகிப் போகும் என்பதுதான் புரியவில்லை.

மூவாயிரம் கிலோமீட்டர் பயணித்து முடித்த மகளிடமிருந்து
அலைபேசி
அப்பா நான் வீடு வந்துவிட்டேன்.
வழி அனுப்பி வைக்க வந்த அப்பா மட்டும்
இன்னும்
நீண்ட நெடிய பயணத்தில்
இத்தனைக்கும்
விரைவு வண்டிகளில்

No comments:

Post a Comment