U R VISITOR NUMBER

Saturday 9 February 2013

நாங்கள் சிறிய அளவில் வணிகம் செய்கிறோம். பேஸ்புக் மூலம் தொடர்புகளை அதிகரிக்க விரும்புகிறோம். இதற்கு அனுமதி பெற வேண்டுமா, கட்டணம் செலுத்த் வேண்டுமா, எப்படிச் செயல்படுவது,
பேஸ்புக் என்பது உலகெங்கும் 50 கோடிப் பேர்களுக்கு மேல் பங்கேற்கும் ஒரு சமூக வலைத்தளம். புரியவில்லையா?
இ.ணையத்தில் உங்களைப் பற்றிப் பிறருக்குச் சொல்லலாம். அவர்களது கருத்துக்களைக் கேட்கலாம். படங்கள் ? காட்சிகளை அளிக்கலாம். இதற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. அனுமதிகளைப் பெற வேண்டிய தேவையும் இல்லை. நீங்கள்தான் யாரை அனுமதிக்கலாம் யாரை அனுமதிக்கக் கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டும்.
கட்டணம் செலுத்தி உங்களுக்கு மட்டுமே தேவைப்படும் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதை அடுத்த நிலையாக மேற்கொள்ளலாம்.
இப்போது
உங்களுடைய குறிக்கோள் என்ன என்பதைத் தெளிவாக்கிக் கொள்ளுங்க்ள்.
உங்களுக்கு வேலைக்கு ஆட்கள் தேவையா,
வாடிக்கையாளர்களைப் பிடிகக் வேண்டுமா,
உங்கள் செவைகள் பற்றிச் சொல்ல வேண்டுமா?
விளம்பரம் செய்ய வேண்டுமா?
நீங்கள் அளிக்கும் தகவல்களை எல்லாரும் பார்க்கலாமா?
யாரெல்லாம் பார்க்கக் கூடாது? முடிவு செய்து கொள்ளுங்கள்.
நீங்கள் அளிக்கும் தகவல்களைப் படிப்பவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொள்வதுதான் உங்களது முக்கியத் தேவையாக இருக்கும். ஆகவே கருத்துக்களைத் தெரிவிப்பதற்குப் பார்வையாளர்களை அனுமதிப்பதே நல்லது.
இல்லை யில்லை.. இது என் தொழில் இரகசியம்..குறிப்பிட்ட வட்டத்திற்குள்தான் இருக்க வேண்டும் என்கிறீர்களா? அதற்கும் ஏற்பாடு செய்து கொள்ளலாம்.
எதை வெளியிடலாம்?
உங்களது தயாரிப்புகள்
சேவைகள்
உங்களிடம் கிடைக்கும் வசதிகள்
புகைப்படங்கள்
காணொளிக் காட்சிகள் (வீடியோ)
நீங்கள் அளிக்கும் தகவல்களையும் படங்களையும் உலகெங்கும் பல பேர் பார்க்கிறார்கள். மேலும் அதிகமானவர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறிர்களா,
ஆம் எனில் நீங்கள் அளிக்கும் தகவல்கள் சுவையாக அமைய வேண்டும். அவற்றைப் பார்ப்பதால் தங்களுக்குப் பயன் கிடைக்கும் என்று நம்புகிறவர்கள் உங்களைத் தொ்டர்பு கொள்வார்கள்.
பல்சுவைப் பத்திரிகை ஒன்றை நடத்துவதைப் போல் எடுததுக் கொள்ளுங்கள்.
உங்கள் தகவல்களை இந்த இடத்தில் வந்து பாருங்கள் என்று உங்களுக்குத் தெரிந்தவர்களை அழைக்க வேண்டும்  வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கத் தேவையி்ல்லை. மின்னஞ்சல் மூலமே அழைக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் சேர்ந்து கொள்வார்கள்.
கவனிக்காமல் இருப்பவர்களையும் கவனிக்க வைப்பதில்தான் உங்கள் வெற்றியே அடங்கி இருக்கிறது.
இன்னொன்றையும் கவனியுங்கள்.
கட்டணம் செலுத்தியும் பேஸ்புக்கில் விளம்பரம் செய்யலாம். இப்போதைக்கு அது உங்களுக்குத் தேவைப்படாது. நல்ல வளர்ச்சியை எட்டிய பின் அதையும்  முயன்று பார்க்கலாம்.
நீங்கள் சில தகவல்களை அளித்து உங்கள் முகநுால் பக்கத்தைத் துவக்கலாம்.
உங்களது சேவைஃ பணி? வணிகம் எத்தகையது என்ற வகைப்பாட்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
(எ-டு) வணிகச் சேவைகள்
உள்ளுர் வணிகம்
இடம்
முழு முகவரி தொலைபேசி அஞ்சல் குறியீட்டு எண் முதலான விவரங்களை அளிக்க வேண்டும்.
விதிமுறைகளுக்குக் கட்டுப்படுத்துவதாகவும் ஒத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் தரும் விவரங்கள் சரியாக இருக்க வேண்டும்.
எந்தப் பெயரில் உங்கள் பக்கம் அழைக்கப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும். ஒருவேளை அந்தப் பெயர் கிடைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்றால் இந்த மாதிரி வைத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்குவார்கள்.
பொருத்தமான பெயரைத் தேர்வு செய்து கொள்ளுங்கள்.
உங்களது மின்னஞ்சல் முகவரி
கடவுச் சொல்
பிறந்த தேதி முதலிய விவங்களை நிரப்புங்கள்.
நீங்கள் மனிதரா அல்லது இயந்திரமா என்பதை உறுதி செய்வதற்காக கேப்சா என்ற குறியீட்டு முறை இருக்கும். வேறொன்றுமில்லை. நீங்கள் பார்க்கும் சொல் ஒன்றை அப்படியே அடிக்க வேண்டும்
விதிகளுக்கு ஒத்துக் கொள்கிறேன் என்று ஒப்புதல் அளிக்க வேண்டும்.
பிறகு?

No comments:

Post a Comment