U R VISITOR NUMBER

Showing posts with label blog. Show all posts
Showing posts with label blog. Show all posts

Thursday, 25 July 2013

பறிமுதல் செய்வதா?

குமுதம்,பேசும்படம், பொம்மை
அம்புலிமாமா
முத்துகாமிக்ஸ்
வண்ண வண்ணமாய்ப் படங்கள்
பலது புரியும் சிலது நெருடும்
இவற்றை யார் எங்கே வாஙகுகிறார்கள் என்பதும் தெரியாது.
ஆனால்
சில பிரகஸ்பதிகளின் புத்தகப் பைக்குள் இவை பாதுகாப்பாக ஒளிக்கப்பட்டிருக்கும். கதைப் புத்தகங்கள் என்ற பொதுவான பெயரில் இத்தகைய தனியார் நுாலகங்கள்.
பெருமைக்காகவும் பொறாமையாலும்
” அவன் கதைப் புத்தகம் வைத்திருக்கிறான்” என்ற செய்தி காற்று வாக்கில் வந்துவிழும். இதற்கென்றே தனி உளவுப் பிரிவு வேலை செய்யும்.
அடுத்து அவை பறிமுதல் செய்யப்படும் -
சின்ன வயதில் அதுதான் வேலையே-
படிப்பதற்காகத்தான்!

Wednesday, 24 July 2013

30 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும்

அந்த நண்பன் எங்கள் கல்லுாரியிலிருந்து விலகி வேறொரு பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்றான்.
அவனுடன் படித்த ஒருவர் என்னுடன் வேலைக்குச் சேர்ந்தார்.
நண்பன் மூலமாகக் கிடைத்த நண்பர்.
சிறிது காலத்திற்குப் பின் நீண்ட பிரிவு.
சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்திருக்கும்.
பெயரையும் வேலை செய்யும் இடத்தையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு தேடிப் போனேன்.
சந்தித்தோம்.
மலரும் நினைவுகளில் மூழ்கினோம்.
இப்போதும் தொடர்பில்இல்லை.. ஏனெனில் நீண்ட இடைவெளிக்குப் பின்னான இன்னொரு சந்திப்பிற்காக..

வளம் பெற வழி

நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் பழகிக் கொண்டிருந்தாலும் அவர்கள் உங்களுக்கு எதையாவது தரத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
நட்பை, காதலை, அறிவை, காழ்ப்புணர்வை, நோயை..
ஆனால் அவர்களிடமிருந்து பணப் பயனை மட்டுமே எதிர்பார்க்க நினைத்தால் ஏமாற்றம் மிஞ்சுவது இயற்கை.
பதிலாக
நட்பை, காதலை, அறிவை, அனுபவத்தை
வாங்கப் பாருங்களேன்
இருவருமே வளம் பெறுவீர்கள்.

Tuesday, 23 July 2013

பறந்து வாருங்கள்..

அன்புள்ள..... .... அவர்களுக்கு,
உங்களை நான் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறேன்..
உங்களால் பறக்க முடியும் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரிந்தபிறகும்
இன்னும்
தத்தித் தவழ்ந்து கொண்டு இருப்பது
மாபெரும் குற்றம்.
ஆகவே பறந்து வாருங்கள்..
(.. .. என்ற இடத்தில் உங்கள் பெயரை நிறைவு செய்து கொள்ளவும்)

படிவத்தை நிரப்புங்கள்

எந்த சாதி..?
என்ன மொழி?
எவ்வளவு சம்பளம்?
எத்தனை பேர்?
வீடு வாடகைக்கு விடுபவர்கள் படிவங்களை அச்சிட்டு வைத்துக் கொள்ளாத குறைதான்..
அது சரி..
நீங்க..
எந்த..?

நீங்களும் லேகியம் விற்கலாம்

சிலபேர் சில டானிக்குகளை வைத்திருக்கிறார்கள்.
லேகியங்களைத் தருகிறார்கள்.
இதற்குக் கட்டணம் எதுவும் வாங்குவதுமில்லை.
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தேவையில்லை.
பிரமாதம்டா..அசத்திட்டே..கொன்னுட்டே என்றெல்லாம்
பாராட்டுகிற
சிலபேர் சில டானிக்குகளை வைத்திருக்கிறார்கள்.
லேகியங்களைத் தருகிறார்கள்.
இதற்குக் கட்டணம் எதுவும் வாங்குவதுமில்லை.
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தேவையில்லை.
இவை உண்மையிலேயே பிரமாதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உண்மை..

Sunday, 21 July 2013

ஏன் அப்படி?

உங்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்.
உங்களை இப்போதும்.. வாடா என்று வாஞ்சையோடு அழைக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்?
அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்? பெற்ற பிள்ளைகளையே அவர், இவர் என்று போலிப் பாசாங்கோடு அழைக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்பீர்கள்.
எது நிசம்? எது போலி? ஏன் அப்படி?

Saturday, 20 July 2013

ஆறு என்ன.. ஐந்து கூட முடியாது..

அன்று அந்த எங்களது வீட்டின் வாங்கிய விலை ரூ700.
விற்ற விலை ரூ900
நிகர இலாபம் ரூ200 என்பீர்கள்.
இன்று அதே ஊரில் (இன்னும் கூடக் கிராமம்தான்)
அந்தக் காசிற்கு ஐந்தே ஐந்து சதுர அடி வெறும் இடத்தைக் கூட வாங்க முடியாது.
இத்தனைக்கும் அன்றைய நிலவரப்படியான எனது கல்வி உதவித் தொகையே ரூ720 .
இன்று 35 ஆண்டுகள் குப்பை கொட்டிய பிறகும் குப்பை கொட்டக் கூடச் சொந்த இடம் இல்லை.
அரும்பாடுபட்டு விலைவாசியை ஏற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

Friday, 19 July 2013

பணம்..பணம்

மாதவாடகை ரூ500
பேசி முடித்துக் குடி வந்துவிட்டோம்.
வாடகைக்கெடு அன்று கொடுக்கப் போனபோது வீட்டு உரிமையாளர் ரூ750 தர வேண்டும் என்றார்.
காரணத்தைக் கேட்டோம்.
”எங்கள் வீட்டில் குடி இருந்து கொண்டே நீங்கள் எப்படி வேறு வீடு பார்க்கப் போயிற்று? நாங்கள் உங்களை எதற்காகக் காலி பண்ண வைக்கிறோம் என்று அவர்கள் கட்டுக்கதை கட்டிவிடமாட்டார்களா? எங்களுக்கல்லவா கெட்ட பெயரை உண்டாக்குகிறீர்கள்?”
”வேறு வசதியான வீடு பார்ப்பது தவறா?”
”ஆமாம்”
”இதுமுறையில்லை..”
”அப்படியானால் ரூ2000 கூடுதல் முன்பணம் கொடுங்கள்”
பணம் கொடுத்தால் கெட்ட பெயர் நல்ல பெயர் ஆகிவிடுமாமா?

Thursday, 18 July 2013

வந்தேறிகள்

வந்தேறிகள்
பிழைக்க வந்த நாய்கள்..
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊருக்கும் குடிசை துாக்கும்போதெல்லாம் இந்த வாழ்த்துக்களைத்தான் நாங்கள்கேட்க வேண்டி இருந்திருக்கிறது.
நேரடியாகச் சொல்லத் தயங்கிய மண்ணின் மைந்தர்கள் கூடத் தங்கள் செயல்களில் இதைக் காட்டி இருக்கிறார்கள்.
சொந்த நாட்டிலேயே இந்த நிலை என்னும் போது இவர்கள்தான் உலக ஒற்றுமை பற்றி ஓயாமல் பேசுகிறார்கள்.. என்னவோ இவர்கள் எல்லாம் அந்தந்த ஊர்களில் மண்ணுக்குள் இருந்து சுயம்புவாக முளைத்தெழுந்தவர்களைப் போல..

Wednesday, 17 July 2013

ஆடம்பரம்?

1979
அந்தக் காலத்தில் 410 ரூபாய்  என்பது அதிகத் தொகைதான் .
அவ்வளவு பணத்தைக் கொடுத்து ஒரு மின் விசிறியை வாங்கினேன்
வீட்டுக்கு எடுத்து வந்தேன்
இதில் என்ன பெரிய அதிசயம் இருக்கிறது என்பீர்கள் .
ஒன்றைக் கவனிக்க வேண்டும்
அப்போதைய எனது சம்பளமே 520 ரூபாய்தான்
ஆடம்பரம்?

Wednesday, 19 June 2013

மல்டி லெவல் மார்க்கெட்டிங்

இங்கேயும் எம்எல்எம்
ஒருவர் பெறும்
உதவியை
இருவருக்குத் திருப்பிச் செய்தால்
உலகம்
ஒரே நாளில்
உன்னதமாகிவிடும்

Tuesday, 18 June 2013

If we play cricket

நாங்களும் கிரி்க்கெட்ஆடினா இப்படிததான் கலந்தாலோசிப்போம்..
ஆனால் சூதாடுவதற்கல்ல..

Monday, 17 June 2013

எங்கே இடுகை இட வேண்டும் என்று கேட்கிறது.
அதில் குழுவின் பெயரை நிரப்ப வேண்டும்.
அனுப்பி வைக்கச் சிறி.....து நேரம் ஆகத்தான் செய்கிறது.
அட..
வந்துவிட்டதே!
இவ்வளவுதானா? இதைப் போய் என்னவோ ஏதோவென்று..
இன்றைக்குத்தான் தெரிந்தது
இங்கே இருந்து
கூகுள் பிளஸ்சுக்கும்
ஃபேஸ்புக்கிற்கும்
படைப்புகளை அனுப்பலாம் என்பது.
அப்படியானால் இதை ஆவணமாக வைத்துக் கொண்டு இங்கிருந்து அங்கே கொடுக்கலாம்.
ஆனால் குழுக்களுக்கு அளிப்பது எப்படி?
ப்ளோக் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா?
கேளுங்கள் தரப்படும்

Thursday, 27 December 2012

how to upload pictures to blog?
the pics must be in jpg,gif or png formats.
select insert pics icon and choose the required pic form file/mobile etc
படங்களை ப்ளாக்கில் ஏற்றுவதற்கு
படங்கள் jpg,gif or png முதலிய வகையில் இருக்க வேண்டும்.
கணினியி்ல் உள்ள கோப்பிலிருந்தும் தேர்ந்தெடுத்து இணைக்கலாம்.