U R VISITOR NUMBER

Friday, 28 June 2013

இனிய மனிதர்..2

அவரே சொல்வார்..எங்கள் சமூகத்தில் கல்லுாரியை எட்டிப் பார்க்கிறவர்கள் குறைவு என்று.
இவர் பட்டம் பெற்றதில் இவரைக் காட்டிலும் இவரது உறவினர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்பார். அதனால் அவர்களே இவரை பி.காம் என்ற பட்டத்துடன்தான் அழைப்பார்கள்.
இவர் வருமானவரித்துறையில் முக்கியப் பதவியில்இருந்திருக்கிறார். அதை உதறிவிட்டுச் சொந்தத் தொழில் செய்ய இறங்கி இருக்கிறார். இவர் கொஞ்சம் விவரமானவர் என்கிற காரணத்திற்காக இவரைக் கூட்டாளி ஆக்கிக் கொண்டவர்கள் படு விவரமாக இருந்திருக்கிறார்கள்.
இழப்புடன் வெளியேற நேர்ந்திருக்கிறது. இருந்தாலும் இவரிடம் கை வசம் தொழில் இருந்தது. பித்தளைப் பாத்திர வியாபாரத்தில் இறங்கி இருக்கிறார். அதில் எண்ணற்ற உத்திகளை இவராகவே உருவாக்கி வெற்றிகரமாக இயக்கியும் இருக்கிறார். படிக்கிற காலத்திலேயே பல சாதனைகளுக்குச் சொந்தக்காரராக இருந்திருக்கிறார். அவை..

No comments:

Post a Comment