U R VISITOR NUMBER

Wednesday, 26 June 2013

சங்கமித்ரா..7

எனக்கு வருகிற ஆத்திரத்திற்கு அவனைச் செருப்பால் அடித்தால்தான் ஆறும் என்று பலரும் சொல்லக் கேட்கலாம். ஆனால் அப்படி அடிப்பவர்களையும் அடி வாங்கியவர்களையும் பார்ப்பது அரிது.
இந்த மனிதர் அடித்துக் காட்டி இருக்கிறார். கோபத்தை அடக்கத் தெரியாதவர் என்பீர்கள்.ஆயினும் இவரது கோபம் நியாயமானதே என்பதை ஒத்துக் கொள்வீர்கள். அவரைப் போன்ற துணிச்சல் நமக்கும் வர வேண்டும் என்று விரும்புவீர்கள்.
இவர் எப்போதும் பத்தோடு பதினொன்றாக இருக்க விரும்பியவர் அல்லர். தமது தனித்தன்மையை எந்தச் சூழ்நிலையிலும் விட்டுக் கொடுக்க எண்ணாதவர். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும் என்பார்கள். ஆனால் இவர் போல அவர் என்று சுட்டிக்காட்ட எவரும் இல்லை என்பதுதான் உண்மை.

No comments:

Post a Comment