U R VISITOR NUMBER

Tuesday, 25 June 2013

சங்கமித்ரா..6

எதற்கும் சளைக்காத உழைப்பு. எப்போதும் எழுதிக் குவிக்கும் குவிப்பு.
எத்தனை இதழ்கள், எத்தனை வகைகள்?
எவ்வளவு கோபம்? ஆற்றாமை?ஆத்திரம்?
உழைக்கிறார்கள் வெற்றி பெறுகிறார்கள் என்று உன்னதமானவர்களை அடையாளம் காட்டிய உங்களது படைப்பு இலக்கியங்களை எல்லாம் மிஞ்சும் இலக்கியம்.
எம்.எஸ்.உதயமூர்த்தி அவர்களின் எழுத்துக்கள் கருத்துரை என்றால் தங்களது செய்முறை. படிக்கப் படிக்கப் பயனுள்ளது.
ஒடுக்கப்படும் போதெல்லாம் வீறு கொண்டு எழ வைப்பது. பாராட்டுவதில் தாங்கள் வள்ளல். குட்டு வைப்பதில் சூரர்.
மனதில் பட்டதை வெளிப்படையாகச் சொல்வதால் பலரது பகைமையையும் சம்பாதித்துக் கொண்டவர்.
நட்பை உரிமையோடு நல்வழிப்படுத்தக் கண்டிக்கத் தயங்காத கனிவு கொண்டவர். உங்களது ஆத்திரத் தீ அணையாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்வது அத்துணை எளிதான செயலா என்ன?

No comments:

Post a Comment