"நான் உங்களுக்கு நிச்சயமாகப் பல நல்ல உத்திகளைக் கற்றுத் தர முடியும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் இதுதான். ரூ3க்கான அஞ்சல்தலையுடன் எனக்குக் கடிதம் எழுதவேண்டும்". இப்படிச் சொல்கிறவர்களுக்கு எதிரில் நிற்பவர்கள் எல்லாருமே உடனே கணக்குப் புலிகள் ஆகிவிடுவார்கள்.
ஒரு ஆளுக்கு ரூ3 என்றால் ஒரு நாளைக்கு எத்தனை 3 ரூபாய்கள்..அடேயப்பா.. இவரல்லவா எளிதில் பணம் சம்பாதித்துவிடுவார் என்றுதான் கணக்குப் போடுவார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் எனக்குத் தெரியும். பதில் கடிதம் போடுவதற்கே அதற்கு மேல் செலவாகும் என்று. எனவே அந்த ரூ3 அஞ்சல் தலைகளுடன் என்னைப் பற்றிய குறிப்புகளையும் எழுதி அனுப்பி வைத்தேன்.
பதில் வந்தால் வரட்டும். வராவிட்டாலும் பரவாயில்லை என்று காத்திருந்தேன். பொறுப்பான பதில் வந்தது. அதன்மூலம் நான் கோடிகளில் புரண்டேனா என்பதைக் காட்டிலும் ஒரு நல்ல மனிதரின் நட்புக் கிடைக்க அது காரணமாக அமைந்தது என்பதுதான் முக்கியம். அவரை அடுத்துச் சந்திப்பது எப்போது என்று கனவு கூடக் காணவில்லை. ஆனால் அது நடந்தது..
No comments:
Post a Comment