U R VISITOR NUMBER

Saturday, 22 June 2013

சங்கமித்ரா ..3

எப்படியோ சில நண்பர்களிடம் எடுத்துச் சொன்னேன்.
சிலரால் கட்டணம் கட்ட முடியும். வேறு சிலருக்கு அது மட்டுமே இயலும். போய்வரும் செலவு கூடுதல் சுமையாக அமையும்.
பார்த்துக் கொள்ளலாம் என்று
ஒரு வழியாக நான்கைந்து பேர் புறப்பட்டுவிட்டோம்.
சென்னையின் இதயம்.. அண்ணா சாலை
தேவநேயப் பாவாணர் பொது நுாலக அரங்கு..
பெரிய கூட்டம் எதுவும் இல்லை.
ஓ..இவர்தான் அந்தப் பா.ராவா?
கண்டதும் கவனிக்க வைக்கும் களை.
முகத்திலும் கூட.ஆனால் அதுவே ஓர் அறிஞருக்குடைய அடையாளமாக வெளிப்பட்டது.
அன்பும் ஆளுமையும் போட்டிஇடும் ஓர் இனிய நட்பு பூப்பதை எல்லாராலும் உணர முடிந்தது.

No comments:

Post a Comment