U R VISITOR NUMBER

Monday, 24 June 2013

சங்கமித்ரா..5

வேறு வேறு களங்கள். வேறு வேறு தளங்கள்.
தனது தந்தையின் பெயரை வெளிப்படையாகச் சொல்வதற்கே அவர் சந்தித்த ஏளனங்கள்.இன்றும் கிராமப்புற இளைஞர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுள் முதன்மையானது. அந்தப் பெயரைக் கொண்டே அவரை வாட்டி வதைத்த மேலதிகாரிகள்.
கல்வியில் நிகழ்த்திய சாதனைகள்.வென்றெடுத்த பதக்கங்கள். முதலிடங்கள். போட்டித் தேர்வுகளில் பெற்ற வெற்றிகள். வேலைகள். வித்தியாசமான அனுபவங்கள். எதிரிகள். நண்பர்கள்.இயல்புகள். திறமைகள்.
இத்தனையும் இணைந்த கலவை. வழிகாட்டியாகக் கொள்ள வகையான மனிதர். ஒரே நேரத்தில் பல்வகைப் பணிகளில் ஆர்வமும் ஈடுபாடும் காட்டக் கூடியவர்.
அஞ்சலட்டையில்தான் எப்போதும் பதில். அதற்கும் சில விதிமுறைகள். கண்டிப்பாய் அனுப்புநர் முகவரியை இடம் பெறச் செய்ய வேண்டும் என்கிற நெறி.கருமியோ என்று எவரும் நினைத்துவிடவும் வாய்ப்புக் கொடுக்க மாட்டார்.தமிழர்கள் நட்சத்திர விடுதிக் கலாச்சாரத்திலும் கற்றுக் கொள்ள வேண்டும் என்பார். அங்கேயும் கருத்தரங்குகளை நடத்துவார்.

No comments:

Post a Comment