U R VISITOR NUMBER

Saturday, 27 July 2013

அவர்கள் பார்வையில் அதுதான் சரி

அதுஎன் தந்தையார் பணியாற்றிய இடம்
எனக்கு அதுதான் புண்ணிய பூமி
சொந்த ஊருக்கு அருகில் இருந்தும் ஒரு நடை எட்டிப் பார்க்க இயலாமல் இருந்த திருத்தலம்
வயிற்றுப் பாட்டிற்காக வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருந்துவிட்டேன்.
பற்பல ஆண்டுகளுக்குப் பின் அந்த ஊரைத் தேடிக் கொண்டு போனேன்
முன்பு இருந்த இடம் என்று ஊருக்குள் கை காட்டினார்கள். அங்கு இப்போது வெறும் மண்மேடுதான் இரு்க்கும் என்றும் சொன்னார்கள்.
புதிய இடத்தையே தரிசி்த்தேன்..
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகச் சில தின்பண்டங்களை அளித்தோம்..
சற்றைக்கெல்லாம் ஊர் கூடிவிட்டது..
” டேய்..செக் பண்ண வந்திருக்காங்கடா.. இன்னிக்கு... தினம் இல்ல.. அதான் கொடி ஏத்தி இருக்காங்களான்னு பார்க்கறதுக்காக வந்தவங்க இவங்க” என்று சிறுவர்கள் கிசுகிசுத்துக் கொண்டதைக் கேட்க முடிந்தது.
நாங்கள், எங்கள் உடை, வாகனம் ஏற்படுத்திய தாக்கம் அது.
வெளியூரிலிருந்து யார் வந்தாலும் விவகாரத்திற்காகவே வருவார்கள் என்கிற கால காலத்து நம்பிக்கை.
நான் அங்கு சென்றிருந்தது
சனவரி 26 ஆம் நாள்..
ஆமாம்..
இந்தியக் குடியரசு நாள்

Thursday, 25 July 2013

Cash handling

 In those days, there were no counting machines.
Only manual counting.
You would have to sort the notes also.
Something would be sticky.
You could not separate the damp pieces.
Some of the notes would have washing marks of turmeric. It is customary  to drop a few currencies in the Aarathi plates.Such notes could not be refused.
Then comes the stitching.
Bundling.
People would say," If you are beaten with a bundle, then the damage should be felt only on your head but no on the currencies".
But, no body had tested that in practical.

பறிமுதல் செய்வதா?

குமுதம்,பேசும்படம், பொம்மை
அம்புலிமாமா
முத்துகாமிக்ஸ்
வண்ண வண்ணமாய்ப் படங்கள்
பலது புரியும் சிலது நெருடும்
இவற்றை யார் எங்கே வாஙகுகிறார்கள் என்பதும் தெரியாது.
ஆனால்
சில பிரகஸ்பதிகளின் புத்தகப் பைக்குள் இவை பாதுகாப்பாக ஒளிக்கப்பட்டிருக்கும். கதைப் புத்தகங்கள் என்ற பொதுவான பெயரில் இத்தகைய தனியார் நுாலகங்கள்.
பெருமைக்காகவும் பொறாமையாலும்
” அவன் கதைப் புத்தகம் வைத்திருக்கிறான்” என்ற செய்தி காற்று வாக்கில் வந்துவிழும். இதற்கென்றே தனி உளவுப் பிரிவு வேலை செய்யும்.
அடுத்து அவை பறிமுதல் செய்யப்படும் -
சின்ன வயதில் அதுதான் வேலையே-
படிப்பதற்காகத்தான்!

Wednesday, 24 July 2013

30 ஆண்டுகளுக்கு முன்னும் பின்னும்

அந்த நண்பன் எங்கள் கல்லுாரியிலிருந்து விலகி வேறொரு பல்கலைக் கழகத்திற்குப் படிக்கச் சென்றான்.
அவனுடன் படித்த ஒருவர் என்னுடன் வேலைக்குச் சேர்ந்தார்.
நண்பன் மூலமாகக் கிடைத்த நண்பர்.
சிறிது காலத்திற்குப் பின் நீண்ட பிரிவு.
சுமார் முப்பது ஆண்டுகள் கழிந்திருக்கும்.
பெயரையும் வேலை செய்யும் இடத்தையும் மட்டுமே நினைவில் வைத்துக் கொண்டு தேடிப் போனேன்.
சந்தித்தோம்.
மலரும் நினைவுகளில் மூழ்கினோம்.
இப்போதும் தொடர்பில்இல்லை.. ஏனெனில் நீண்ட இடைவெளிக்குப் பின்னான இன்னொரு சந்திப்பிற்காக..

வளம் பெற வழி

நீங்கள் யாருடன் பேசிக் கொண்டிருந்தாலும் பழகிக் கொண்டிருந்தாலும் அவர்கள் உங்களுக்கு எதையாவது தரத் தயாராகத்தான் இருக்கிறார்கள்.
நட்பை, காதலை, அறிவை, காழ்ப்புணர்வை, நோயை..
ஆனால் அவர்களிடமிருந்து பணப் பயனை மட்டுமே எதிர்பார்க்க நினைத்தால் ஏமாற்றம் மிஞ்சுவது இயற்கை.
பதிலாக
நட்பை, காதலை, அறிவை, அனுபவத்தை
வாங்கப் பாருங்களேன்
இருவருமே வளம் பெறுவீர்கள்.

Tuesday, 23 July 2013

பறந்து வாருங்கள்..

அன்புள்ள..... .... அவர்களுக்கு,
உங்களை நான் கடுமையாகக் குற்றம் சாட்டுகிறேன்..
உங்களால் பறக்க முடியும் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரிந்தபிறகும்
இன்னும்
தத்தித் தவழ்ந்து கொண்டு இருப்பது
மாபெரும் குற்றம்.
ஆகவே பறந்து வாருங்கள்..
(.. .. என்ற இடத்தில் உங்கள் பெயரை நிறைவு செய்து கொள்ளவும்)

படிவத்தை நிரப்புங்கள்

எந்த சாதி..?
என்ன மொழி?
எவ்வளவு சம்பளம்?
எத்தனை பேர்?
வீடு வாடகைக்கு விடுபவர்கள் படிவங்களை அச்சிட்டு வைத்துக் கொள்ளாத குறைதான்..
அது சரி..
நீங்க..
எந்த..?

விந்தை மனிதர்

ஒருதனிமனிதர்
ஆங்கிலம் கண்டு அஞ்சி ஒதுங்கிய நம்முள் பலரையும் போன்றவர்
கணினியில் தாமாகவே பலவற்றைக் கற்றுக் கொண்டவர்
களஞ்சியம் என்ற பெயரில் ஓர் அகராதியை உருவாக்கி இருக்கிறார்
பாருங்கள்..
இதைப் பற்றிச் சிலவரிகளில் சொல்ல வேண்டுமானால்
முகப்பிலேயே
தேடிச் சோறு நிதம் தின்று
என்னும் மகாகவியின் வாக்கைக் குறிப்பிட்டிருக்கிறார்.
பொட்டில்அடித்த மாதிரி இருக்கிறது..
வேடிக்கை மனிதர்கள் மத்தியில்
விந்தை மனிதர்

நீங்களும் லேகியம் விற்கலாம்

சிலபேர் சில டானிக்குகளை வைத்திருக்கிறார்கள்.
லேகியங்களைத் தருகிறார்கள்.
இதற்குக் கட்டணம் எதுவும் வாங்குவதுமில்லை.
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தேவையில்லை.
பிரமாதம்டா..அசத்திட்டே..கொன்னுட்டே என்றெல்லாம்
பாராட்டுகிற
சிலபேர் சில டானிக்குகளை வைத்திருக்கிறார்கள்.
லேகியங்களைத் தருகிறார்கள்.
இதற்குக் கட்டணம் எதுவும் வாங்குவதுமில்லை.
போலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என்கிற எச்சரிக்கையும் தேவையில்லை.
இவை உண்மையிலேயே பிரமாதமாக வேலை செய்கின்றன என்பதுதான் உண்மை..

Sunday, 21 July 2013

ஏன் அப்படி?

உங்களுக்கு வயது என்னவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.
நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போங்கள்.
உங்களை இப்போதும்.. வாடா என்று வாஞ்சையோடு அழைக்க எத்தனை பேர் இருக்கிறார்கள்?
அதை நீங்கள் எப்படி ஏற்றுக்கொள்வீர்கள்? பெற்ற பிள்ளைகளையே அவர், இவர் என்று போலிப் பாசாங்கோடு அழைக்கும் பெற்றோர்களைப் பார்த்திருப்பீர்கள்.
எது நிசம்? எது போலி? ஏன் அப்படி?

Utility Value

i had no furniture in my dwelling.
after a very serious thought i went for purchasing a table and chair. the budget was around Rs.100 -
(Remember.. it was 1980)
road side vendors had displayed their articles.
i made calculations.
instead of buying a table and chair, i opted for a cot.it can also be used as a table. moreover, sleeping would be comfortable. i bargained and got it for Rs.100 - including home-delivery charges.
it was brought on a rickshaw all the way from Kancheepuram to Mamandur  covering a distance of 10 Kms.
We celebrated the possession.
For more than two decades i maintained that with regular coat of protective varnish.
due to transportation difficulties i gifted that cot to a friend
Calculating the utility value, that Rs100- is more than Rs.10,000- to day.

Saturday, 20 July 2013

ஆறு என்ன.. ஐந்து கூட முடியாது..

அன்று அந்த எங்களது வீட்டின் வாங்கிய விலை ரூ700.
விற்ற விலை ரூ900
நிகர இலாபம் ரூ200 என்பீர்கள்.
இன்று அதே ஊரில் (இன்னும் கூடக் கிராமம்தான்)
அந்தக் காசிற்கு ஐந்தே ஐந்து சதுர அடி வெறும் இடத்தைக் கூட வாங்க முடியாது.
இத்தனைக்கும் அன்றைய நிலவரப்படியான எனது கல்வி உதவித் தொகையே ரூ720 .
இன்று 35 ஆண்டுகள் குப்பை கொட்டிய பிறகும் குப்பை கொட்டக் கூடச் சொந்த இடம் இல்லை.
அரும்பாடுபட்டு விலைவாசியை ஏற்றும் அனைத்துத் தரப்பினருக்கும் உளமார்ந்த நன்றிகள்.

MT or empty

even during my college days, i was unaware of MT.
one of my friend explained what a MT was.
event though it was found convenient, my parents were unable to come to the town for utilizing this facility.
even now the young generation is having no idea of MT
because technology has advanced like that.
when NEFT and RTGS  have become the order of the day,
who cares for MT.
it has become empty.

Friday, 19 July 2013

பணம்..பணம்

மாதவாடகை ரூ500
பேசி முடித்துக் குடி வந்துவிட்டோம்.
வாடகைக்கெடு அன்று கொடுக்கப் போனபோது வீட்டு உரிமையாளர் ரூ750 தர வேண்டும் என்றார்.
காரணத்தைக் கேட்டோம்.
”எங்கள் வீட்டில் குடி இருந்து கொண்டே நீங்கள் எப்படி வேறு வீடு பார்க்கப் போயிற்று? நாங்கள் உங்களை எதற்காகக் காலி பண்ண வைக்கிறோம் என்று அவர்கள் கட்டுக்கதை கட்டிவிடமாட்டார்களா? எங்களுக்கல்லவா கெட்ட பெயரை உண்டாக்குகிறீர்கள்?”
”வேறு வசதியான வீடு பார்ப்பது தவறா?”
”ஆமாம்”
”இதுமுறையில்லை..”
”அப்படியானால் ரூ2000 கூடுதல் முன்பணம் கொடுங்கள்”
பணம் கொடுத்தால் கெட்ட பெயர் நல்ல பெயர் ஆகிவிடுமாமா?

Two in one

It was my first day in that branch.
some SHG members approached for a withdrawal.
on scrutinizing their resolution, i found a strange thing.
almost all the signatures had an uniform stroke.
somebody might have forged.
i inquired.
the secretary of that SHG confessed her act at last.
there was a death in that village. in order to meet the expenses, the secretary had chosen the short cut of putting all other members signatures.
realizing the genuineness of the situation, i went to the spot and got the members' signatures gathered there.
two purposes solved:
forbid forgery
help needy

Thursday, 18 July 2013

வந்தேறிகள்

வந்தேறிகள்
பிழைக்க வந்த நாய்கள்..
ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஊருக்கும் குடிசை துாக்கும்போதெல்லாம் இந்த வாழ்த்துக்களைத்தான் நாங்கள்கேட்க வேண்டி இருந்திருக்கிறது.
நேரடியாகச் சொல்லத் தயங்கிய மண்ணின் மைந்தர்கள் கூடத் தங்கள் செயல்களில் இதைக் காட்டி இருக்கிறார்கள்.
சொந்த நாட்டிலேயே இந்த நிலை என்னும் போது இவர்கள்தான் உலக ஒற்றுமை பற்றி ஓயாமல் பேசுகிறார்கள்.. என்னவோ இவர்கள் எல்லாம் அந்தந்த ஊர்களில் மண்ணுக்குள் இருந்து சுயம்புவாக முளைத்தெழுந்தவர்களைப் போல..

You can't believe it

He was a temporary sub staff..
He would feel very much annoyed when we ask him to wear pant and shirts.
He was afraid of cycling.
He would be ready to carry a load of 50Kgs on his back. But, he won't prefer a cycle.
We had to change him a lot.
Then he was confirmed.
In due course he was able to learn new things.
He got his PG degree and got promoted.
Certainly no one would believe his past.

Wednesday, 17 July 2013

ஆடம்பரம்?

1979
அந்தக் காலத்தில் 410 ரூபாய்  என்பது அதிகத் தொகைதான் .
அவ்வளவு பணத்தைக் கொடுத்து ஒரு மின் விசிறியை வாங்கினேன்
வீட்டுக்கு எடுத்து வந்தேன்
இதில் என்ன பெரிய அதிசயம் இருக்கிறது என்பீர்கள் .
ஒன்றைக் கவனிக்க வேண்டும்
அப்போதைய எனது சம்பளமே 520 ரூபாய்தான்
ஆடம்பரம்?

It differs

It was the final day of our induction training.
The faculty members were busy distributing answer sheets.
I too got it .. but with a low score. i.e below 35%
35% is the passing minimum almost universally. So, I was very much worried.
I found some of my answers were correct but denied by the examiner. Almost a battle was staged to get the additional marks to cross the 35% level.
Being a science student, I thought I couldn't manage for a long in the Banking industry.
Commerce or Science..practice differs from laws.

Tuesday, 16 July 2013

Not once upon a time..

There was a branch..
were you could not get water for your needs
no hotels in the vicinity
no transportation
no medical facility
no basic amenities
even then,
people had identified that as a bankable area with high potential.
everybody is talking about delivery channels, modern facilities etc..
"where will you for the lunch?"
from employees to visitors, nobody can find an answer.
Still more branches are like that.

நட்பும் சுற்றமும்

பற்பல ஆண்டுகளுக்குப் பின் சந்தித்துக் கொள்கிறோம்.
உரையாடலில் கவனம் செலுத்தாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்போம்.
ஒரு நிமிடத்தில் முடிக்க வேண்டிய அலைபேசி உரையாடலை ஒரு நாள் வரை நீட்டிப்போம்.
இப்படியெல்லாம் பல விருந்தினர்களை எதிர்கொள்வதால்தான் யாருமே வீடு தேடி வருவதும் இல்லை..நாமும் போவதும் இல்லை.பல வீடுகளில் இதுதான் நிலை.
நான் இந்த இரண்டு தொல்லைகளிலுமிருந்தும் தள்ளியே இருக்கிறேன்.
அதனால்தான் நட்பும் சுற்றமும் என்று சொல்லிக் கொள்ள
நாலு பேர் இருக்கிறார்கள்.

Monday, 15 July 2013

மனப் புழுக்கம்

அதிகமான எண்ணிக்கையில் தீப்பெட்டிப் படங்களை வைத்திருப்பவன் பணக்காரன். மரம் ஏறத் தெரிந்தவன் சகலகலா வல்லவன். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவன் அசகாய சூரன். அதிலும் சொந்தமாக வைத்திருப்பவன் ஒரு படி மேலே. புதிதாக வந்த திரைப்படத்தை நகரத்தில் போய்ப் பார்த்துவிட்டு வந்தவன் உண்மையிலேயே கதாநாயகன்.
கொஞ்சம் வளர்ந்த பின்..
அதிகம் பணம் வைத்திருப்பவன்..
சொந்தக் கார்க்காரன்..
பெரிய வேலையில் இருப்பவன்.
வசதியான மாமனாரைப் பெற்றவன்.
இப்படி எல்லாருமே எல்லாக் காலங்களிலுமே தனிமைப்படுத்தப்பட்டே வருகிறார்கள்.
அவனுக்கு நான் தேவலாம் என்று ஆறுதல்பட்டுக் கொள்வதும்..
அவனுக்கு மச்சம் என்று வெந்து புழுங்குவதும் எங்கேயும் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

Stand on your own legs

He was my superior.
Every now and then, he would insist on noting down everything he instructs.
Often I would feel that it is an unnecessary task. I have a good ranking on my memory power.
Sometimes, I may not be able to follow even the very next step.
Then I realized the importance of the advice I received.
Especially for computer related instructions, it is better to have a separate file this.
Now I've started advising people to take a note of it.
If you follow, you need not depend on others.

Sunday, 14 July 2013

எது, யார் கையில்?

நானும் நண்பனும் ஒரே நேரத்தில் அந்த வேலையில் சேர்ந்தோம். எங்களுக்குக் குடும்ப ரீதியிலான வசதி வாய்ப்புகளில் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும் நான் டெரிகாட்டனில் சீருடை எடுத்திருந்தேன். நண்பன் பருத்தித் துணியில்.
காரணம் கேட்டேன்.
”நீ இதே வேலையில் தொடர்ந்து இருப்பாய்.. அதனால் உனக்கு நீண்டு உழைக்கும் சீருடை தேவை. நான் விரைவில் வெளியில் போய்விடுவேன். ஆகவே இது தற்காலிகம்தான்.. இது போதும்”
என்கிற பதில் வந்தது.
பத்து நாட்களுக்குப் பின் நான் அந்த வேலையை விட்டு வெளியேறிவிட்டேன்.
நண்பன் இன்னும் அதே துறையில்..

www

I was transferred to another branch.
Well before the reliever comes, I did go to the new place and fixed a house.
Even if I am not worrying about auspicious days, I have to respect the sentiments of others.That is why, I arranged for the residence well in advance.
I was waiting for the reliever to arrive.
Wait..Wait..Wait
Cancellation orders poured in.
again www
I was assigned some other branch.

Friday, 12 July 2013

health front

it was a village.
there was only a primary health center.
the medical officer may or may not come.
you cannot find a qualified doctor within a radius of 25 kms.
only barefoot doctors were available.
nothing can be said about transportation.
in such a surrounding i was healthy for two and a half decade.
when i moved to  places with modern medical facilities available, i got all sorts of trouble.

விதி ”வலி”யது

கல்லுாரி நாட்களில் அவன் மூன்று நாளைக்கு நான்கு வீடுகள் மாற்றிக் கொண்டு இருப்பான். நாங்கள் அவனைக் கேலியாகக் குடிசை மாற்று வாரியம் என்போம். படிப்பு முடிந்ததும் ஆளுக்கு ஒரு பக்கம் போனோம். அடிக்கடி இட மாற்றங்களுக்கு ஆளானோம்.
ஆனால் அவன் மட்டும் இன்னும் ஒரே ஊரில் குப்பை கொட்டிக்கொண்டிருக்கிறான்.
என்னத்தைச் சொல்வது?

Thursday, 11 July 2013

Pioneers

in the good old days everything was manual.
we would struggle a lot to tally our daybook, GL, weekly etc.
even before tbc, standalone pcs were provided to branches.
no installation of o/s continued in a number of branches.
during that period some self motivated people introduced one Excel based daybook system.
the beauty was, even a layman can handle it.
no differences.. no time loss.
we salute those pioneers!

தொடர்வதா விடுவதா?

படிக்கிற காலத்தில் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்வார்.
எல்லாரும் தீவிரமாக விளையாட்டாய்ப் பொழுதுபோக்குகையில் நான் தியானம் செய்யப் போகிறேன் என்று கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்துவிடுவார்.. எங்காவது வெளி இடங்களுக்குச் சென்றால் அஙகும் தியானத்தில் அமர்ந்துவிடுவார். சூழ்நிலைக்கு ஏற்பத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்கிறாராம்.நாங்கள் வேடிக்கை பார்ப்போம். கிண்டல் செய்வோம்.
காலங்கள் உருண்டோடிவிட்டன.
அந்த நண்பர் தியானம் செய்கிற மாதிரித் தெரியவில்லை.
நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம்.

Wednesday, 10 July 2013

பதற்றம் தவிர்

நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் உழைத்துக் கொண்டிருந்தார். உழைப்பு என்றால் சாதாரண உழைப்பல்ல. உண்மையாகவே நெற்றிவியர்வை நிலத்தில் விழ உழைப்பார். பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவே இருப்பார்.
இந்த விண்ணப்பத்தில் மேலொப்பம் வாங்க வேண்டும் என்று போய் நிற்போம். அதற்கென்ன .. வாங்கிவிட்டால் போகிறது என்பார்.
இன்றைக்குக் கடைசி நாள்.
பயப்படாதீங்க..
ஒரு வேளை தாமதமாகிவிட்டால்..?
அதெல்லாம் ஒரு கவலையும் வேண்டாம்..
யாரிடம் வாங்கலாம்..
..ரிடம்..
அவர் அலுவலகம் கிளம்பிவிடுவாரே..
வீட்டிலேயே பிடித்துவிடுவோம்..
----------------------------
உறுதியாகச் சொல்வார். சொன்னபடி முடித்துக் கொடுத்துவிடுவார். எங்களுக்குத்தான் பக்..பக் என்று இருக்கும். அவரோ  அலட்டிக்கொள்ளவே மாட்டார்..எந்தச் சூழ்நிலையிலும்..

fetch a pail of water

It will be cyclic. Once in four years there will be a drought.
Drinking water will become scare.
You will have to go a few kilometers to fetch a pail of water.
Carry the load on your bicycle.
Alas..
The tube will get punctured when you are just a few meters away from your house.
The pity is, this will happen when you are returning.
Have you ever experienced such a miserable situation?

Tuesday, 9 July 2013

வலிய வந்து உதவு

சிலரிடம் வலியப் போய்க் கேட்டால் உதவுவார்கள்.
இவர் வலியப் போய் உதவுவார். தனக்கு அந்த வாய்ப்பைத் தந்தமைக்காக அவர்களுக்கு நன்றியோடு இருப்பதாகச் சொல்வார்.
பல ஊர்கள், மாநிலங்கள், நாடுகளில் நண்பர்கள் இவருக்கு உண்டு. அவர்களில் ஒரே ஒருவர் கூட இவரால் இழப்பை எதிர்கொண்டார் என்கிற சரித்திரமே கிடையாது என்பார். ஆதாயத்திற்காக மட்டுமே நட்பு என்கிற இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர்.
எனது நண்பர்களில் எவர் மீது்ம் எனக்கு வெறுப்பு இல்லை என்பார். யாராலும் தமக்குத் துன்பம் வந்ததில்லை என்றும் கூறுவார்.
இவருடன் நட்பாய் இருப்பது எல்லாருக்கும் நல்லது என்று பலரும் பரிந்துரைப்பார்கள். அது உண்மை என்று தெரிந்திருப்பதால்.

Fishing in Rented house

At first, we were able to rent a house in that village.Our portion was situated at the backyard of the landlord's house.
The residents in that entire street were pure vegetarians.
We were considered outsiders in that locality.
There was a teacher from Madurai.
Since we too were nearer to it, we became friends.
One day, the teacher's wife brought us a small vessel.
Following her, the landlady arrived.
The scene turned pathetic.
Reason:.That vessel contained a fish, roasted!

Monday, 8 July 2013

முயன்று பார்க்கலாமே..

மீனைக் கொடுப்பதை விடவும் மீன்பிடிக்கக் கற்றுக் கொடுப்பது மேல் என்பார்கள். இவர்கள் அந்த இரகம்.குழந்தைகளுக்கு நல்ல பழக்க வழக்கங்களைக் கற்றுக் கொடுப்பதில் இந்த வயதிலும் இவர் சுறுசுறுப்பான இளைஞர். எப்போதும் எதிர் மறைச்சொற்களைத் தவிர்க்க வேண்டும் என்பதில் ஈடுபாடு கொண்டவர்.நெய் இல்லா உண்டி பாழ் என்பதையே நெய்யுடன் உண்பது மேல் என்று திருத்திக் கொண்டால் என்ன என்பார்.
சாலையைக் கடக்க வேண்டுமா? இருபுறம் பார்த்து மறுபுறம் நட என்பார். இது குழந்தைகளுக்கு மட்டுமான அறிவுரையாக எடுத்துக் கொள்ள முடியாது. பெரியவர்களுக்கும்தான்.

Beyond boundaries

I particularly watched that post.
It was from a branch I know.
Hence, I tried to contact that gentleman.I had been in that area for a very long time.
So he came close to my heart.
Within a short span of time, he got elevated in our own institution.
By feeling the same wavelength, I greeted him as soon as her arrived at the training centre.
A friendship beyond boundaries!


Sunday, 7 July 2013

Old NEWs

I had to attend an examination at Chennai.
Distance to be traveled was around 160 kms.
There was no transport facilities since a communal struggle was going on.
I started to travel by a bicycle.
After a few kms a mob disrupted traffic.
Trees were felled down.
Somehow I managed to reach Kancheepuram. From there, I took a passenger train.
That too was not safer.
All along the way, people stoned over the compartments with uncontrollable anger.
We downed the shutters.
On reaching Chennai, I was standing alone at the (then) Broadway bus stand.
somewhere in a shop, TV news came: Normalcy Restored

தகவல் அளிக்கிறீர்களா?

தகவல் அளிப்பு
நீங்கள் பாட்டுக்குக் கடிதங்களை அனுப்பிக் கொண்டே இருக்காதீர்கள். மறு முனையில் இருந்து எந்தவிதப் பொறுப்பான பதிலும் வரவில்லை என்றால் எதற்காக அனுப்பிக் கொண்டே இருப்பது? அறிந்தவர், அங்கீகரிப்பவர்களை மட்டுமே  தொடர்பி்ல் வைத்திருங்கள் என்பார் சி.இரா.
உழைப்பு யாருடையதாக இருந்தாலும் அது விரையமாக்கப்படுவதை விரும்ப மாட்டார். வெளியூர் வந்திருக்கிறாரா..“தம்பி..நான் இன்ன இடத்தில் இருக்கிறேன்.. இத்தனை மணிக்குப் புறப்படுவேன் ”என்று வீட்டுக்குத் தகவல் கொடுத்துவிடுவார். அவர்கள் என்னவோ ஏதோவென்று பதற்றம் கொள்ள இடம் கொடுக்க மாட்டார்.
கடிதங்கள், மின்னஞ்சல்கள், தொலை,அலைபேசி விசாரிப்புகள் என எதற்கும் பொறுப்பான, நேரப்படியான பதில்களை அளிப்பார். இது அவரிடமிருந்து எவரும் கற்றுக் கொள்ளத் தக்க பாடம்.

Saturday, 6 July 2013

Fear over the city

It was 1979.
I was attending my induction training at Chennai.
Then there was a choas.
A discarded satellite named skylab was expected to hit the city,
Considerable population of Chennai evacuated on a hurry.
My native was at 420 kms south of chennai.
If I had been there, then there won't be nothing to worry.
But I was right at the target. 

பத்து நிமிடம் பேசப் பத்து மணி நேரப் பயணம்

பயணம் இவருக்குப் பிடித்தமான தொழில்.
வெறும் பயணம் அல்ல. தேடலுடன் கூடிய பயணம். யாருக்கேனும் பயன்படக் கூடிய பயணம். முன்னதாகவே திட்டமிட்டு மேற்கொள்ளப்படு்ம பயணம். இன்று இன்ன இடத்தில் இன்னாரைச் சந்திக்க இயலுமா என்று அனுமதி கேட்டு அதன்படி செயல்படுத்தப்படும் பயணம்.
சந்திப்பின்போது என்னென்ன பேச வேண்டும்என்பதைக் குறித்துக் கொண்டு வந்திருப்பார் சி.இரா. ஒவ்வொன்றாய்ப் பேசி முடித்ததும் விடை பெறுகிறேன் என்று புறப்பட்டு விடுவார். பயணம் வந்ததே பல மணி நேரமாக இருக்கும். பயனுள்ள பேச்சாக இருந்தால் பத்து நிமிடம் பேர்தும் என்பார். மீண்டும் அடுத்த பயணத்தைத் துவக்கிவிடுவார்.
சின்ன விசயமாகத் தோன்றும். சிந்தித்தால் சிக்கனம் விளையும். பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டிய பல உத்திகளுள் இதுவும் ஒன்று.

Friday, 5 July 2013

Rare breed

Every inspector will ask for this and that when he enters the branch.
When leaving, they will invariably thank everybody for extending co-operation
Usually, the FRC will take a very long time.
But, he is an inspector extra ordinary. He won't point out only he irregularities. Suitable solutions will be provided by him. A systematic approach can be learnt from him.
Carrying out all his instructions will help the branch immensely.
Such inspectors are rare.

புத்தகப் பிரியர்..

இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்..அது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்..
கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள்.. நான் தேடிப்பிடித்துத் தருகிறேன்.. என்பார் சி.இரா.
வெளியூர் சென்று திரும்பும் போதெல்லாம் விதவிதமான புத்தகங்களை வாங்கி வருவார். படிக்கத் தருவார். பரிசளிப்பார். புத்தகம் வாங்குவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிடுவார். நிறையச் சேர்ந்துவிட்டால் யார் பயன்படுத்துவார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடுவார். அவர்களுக்குப் பயன்படுகிறதா என்பதை அக்கறையோடு விசாரிப்பார்..படிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் எழுதுபவர்களுககும் இந்தப் பொருள் குறித்து எழுதுங்களேன் என்று ஆலோசனை சொல்வார்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு இவர் அளித்த புத்தகப் பரிசுகள் ஏராளம்.

Thursday, 4 July 2013

Cash Clearing Transfer

Then:
We would be posted at a far away place some 400 kms from our native.
Our request for nearby branches won't be considered.
Now;
Posting at their own street is offered.
People are not preferring. The reasons may be the better understanding of the local people.
They opt for other places.
Times are changing.
Generation gap?

இனிய மனிதர் ..8

நான் உங்கள் அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன்.
அப்போது நாங்களே தயாரித்த பால்பாயின்ட் பேனா ரீபில்களை விற்பதற்காக அணுகி இருக்கிறேன்..
என்றார் சி.இராவின் புதல்வர் திரு பாரி.
அப்போது பாரிக்குப் பத்துப் பதினைந்து வயது இருந்திருக்கலாம்.
பார்த்ததாக எங்களுக்கு நினைவில்லை.
கண்டிப்பாக வாங்கியும் இருக்க மாட்டோம். எந்தக் காலத்தில் நாம் உள்ளுார்த் தயாரிப்புகளைப் பொருட்படுத்தி இருக்கிறோம்?
சிஇரா தமது மக்களுக்குச் சூட்டிய பெயர்கள்
பாரி அன்பு அறிவு
பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்டுக் கொள்வதையே கூடத் தமது தொண்டுகளில் ஒன்றாக வைத்துக் கொண்டிருக்கிறார் சி.இரா.
சுரேஷ்களும் மகேஷ்களும் கேட்டால்தானே?

Wednesday, 3 July 2013

"Athithi Devo bavo"

There was no hotel at all.
Inspectors, people on deputation, transfer et al would find it very difficult to have a neat meal.
There was no other go. I was the only person staying there with family.
Hence I would have to provide meals for them.
Accepting money won't be nice.
Further, it was a real burden for my family members.
Yet, we lived up to the scripts:
"Athithi Devo bavo"

நல்லாசிகளைத் தேடுவது முக்கியம்

வயதானவர்களைச் சுற்றுலா அழைத்துச் செல்வது.
இதை அவர் வணிக நோக்கில் துவக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
” இராமலிங்கம்..நீதான் விவரம் தெரிந்த ஆளாக இருக்கிறாயே.. நாங்களெல்லாம் பல ஊர்களைப் பார்க்கவே இல்லை.. எங்களைக் கூட்டிக் கொண்டு போய்க் காட்டேன்” என்று கேட்டுக் கொண்டவர்களுக்கு உதவுவதற்காக இவர் ஆரம்பித்த சுற்றுலாப் பயணங்களால் பலன் பெற்றவர்கள் பலர்.
அதனால் கிடைத்த பணப்பயனைக் காட்டிலும் அவர்களது மனமார்ந்த ஆசிகள் தமது வளர்ச்சி்க்குப் பெரிதும் உதவியதாகச் சொல்வார் இவர்.
இவருடன் சுற்றுலா சென்றால் பாதுகாப்பாகச் செல்லலாம். சிக்கனமாக அமையும். பார்க்க வேண்டிய இடங்களைத் தவற விடாமல் பார்க்கலாம் என்கிற நற்பெயர் பரவலாயிற்று.
“நான் உங்கள் ஊருக்கு அருகிலேயே இருந்திருக்கிறேன்..தெரியுமோ?” என்றார். ஏன் எங்களுக்குத் தெரியாமல் போயிற்று?

Tuesday, 2 July 2013

இனிய மனிதர்..6

அவருடைய உறவினர் ஒருவருக்கு வெளிமாநிலத்திலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட சரக்கு ஒன்று வந்து சேரவில்லை. போக்குவரத்து நிறுவனம் என்னென்னவோ சாக்குப் போக்குகளைச் சொல்லித் தட்டிக்கழித்துக் கொண்டிருந்தது.
சரக்கைப் பெற வேண்டியவர் சலித்துப் போய்விட்டார். இனி அதைப் பெறவே வழி இல்லை என்று தளர்ந்துவிட்டார். இது குறித்துப் பேச்சு வாக்கில் சி.இராவிடம் தெரிவித்திருக்கிறார்.
சி.இரா எல்லா விவரங்களையும் முறைப்படி திரட்டி, எழுதிய கடிதத்திற்குப் பலன் கிடைத்தது. சரக்குக்குரிய தொகையை நண்பருக்குப் பெற்றுத் தருவதில்  சளைக்காது பாடுபட்டார் சி.இரா.
இப்படி எத்தனையோ கை நழுவிப் போன சொத்துக்களை மீட்டுக் கொடுத்ததில் அவருக்கு ரொம்பவும் நல்ல பெயர்.
அதைவிட நல்ல பெயர் அவருக்கு வேறொரு வகையிலும் கிடைத்து வந்தது. அது..

Can you recall?

He had been posted to our branch very recently.
It was Dec 01, 20XX
We invited him to deliver a lecture on the event of Dec01,
It was a co-ed HSSchool. He readily accepted the invitation and  made the event a great success.
It was an opportunity created and offered.
We truly tried to encourage our juniors.
How many of you can recall such incidents?

Monday, 1 July 2013

how to e-sign your mail?

He is an Engineer. Now, a banker.An ambitious youngster.
His goal: Becoming a GM
We discussed much on computers. "How we can use the system more effectively?"
This will be our hot topic.
I will ask for a solution and he will respond.
He taught me many things.I learned a little..that is the universal truth.
Till date we are continuing our search for user friendly technological advancements.
Of late, he taught me to sign e-mails electronically.
Interesting?

இனிய மனிதர்..5

எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் சந்திப்பது என்பது எல்லாருக்கும் வாய்க்காது.எனக்கு வாய்த்தது. இவர் வெளிநாடு சென்று வந்த கதையை விவரித்தார். கதை கேட்கும் ஆர்வம் யாருக்குத்தான் இல்லை..?
என்ன வித்தியாசம்.. கதைகள் வேறு வேறு விதத்தில் இருக்கும். இது இவரது பயணக் கதை.
இன்ன தேதியில் இந்த இடத்திற்கு வந்தால் எங்கே தங்க முடியும்? நண்பர்கள் வட்டாரத்தில் விசாரிப்பார். தகவல்களைத் திரட்டுவார். முன்னதாகவே தெரிவிப்பார். சொன்னபடி போய் இறங்குவார்.
சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவர்( பெரியாரின் சீடர் என்பதால் கேட்கவே வேண்டாம்). வெளிநாடுகளில் பணம் கொடுத்து விருந்தினராகத் தங்கும் வசதிகள் ஏராளம். பிரபல விடுதிகளில் தங்குவதை விட இது செலவு குறைவாக ஆகும். இவர் எப்படித் தங்கினார் என்பதைச் சுவைபட விவரிப்பார். நாமே போய் வந்த மாதிரி இருக்கும்.
கதை சொல்லிகள் கவர்ந்திழுப்பது இப்படித்தானே.. இவரிடம் நல்ல பல கதைகள் கிடைக்கும். எண்ணிலடங்காப் பேருந்துகளுக்குச் சொந்தக்காரராக இருந்தவர் எப்படி ஓட்டாணடிஆனார் என்பதை இவர் விவரிக்க ஆரம்பித்தால் அதில் சத்தியமான உண்மை இருக்கும்.. அதனால்தான் அவரிடம் கதை கேட்கப் பிடிக்கிறது. ஆகவே..