U R VISITOR NUMBER

Friday, 5 July 2013

புத்தகப் பிரியர்..

இந்தப் புத்தகத்தைப் படியுங்கள்..அது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்..
கிடைக்கவில்லை என்றால் சொல்லுங்கள்.. நான் தேடிப்பிடித்துத் தருகிறேன்.. என்பார் சி.இரா.
வெளியூர் சென்று திரும்பும் போதெல்லாம் விதவிதமான புத்தகங்களை வாங்கி வருவார். படிக்கத் தருவார். பரிசளிப்பார். புத்தகம் வாங்குவதற்கென்றே ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கிவிடுவார். நிறையச் சேர்ந்துவிட்டால் யார் பயன்படுத்துவார்களோ அவர்களுக்குக் கொடுத்துவிடுவார். அவர்களுக்குப் பயன்படுகிறதா என்பதை அக்கறையோடு விசாரிப்பார்..படிப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் எழுதுபவர்களுககும் இந்தப் பொருள் குறித்து எழுதுங்களேன் என்று ஆலோசனை சொல்வார்.
பள்ளி மாணவ, மாணவியருக்கு இவர் அளித்த புத்தகப் பரிசுகள் ஏராளம்.

No comments:

Post a Comment