U R VISITOR NUMBER

Tuesday, 9 July 2013

வலிய வந்து உதவு

சிலரிடம் வலியப் போய்க் கேட்டால் உதவுவார்கள்.
இவர் வலியப் போய் உதவுவார். தனக்கு அந்த வாய்ப்பைத் தந்தமைக்காக அவர்களுக்கு நன்றியோடு இருப்பதாகச் சொல்வார்.
பல ஊர்கள், மாநிலங்கள், நாடுகளில் நண்பர்கள் இவருக்கு உண்டு. அவர்களில் ஒரே ஒருவர் கூட இவரால் இழப்பை எதிர்கொண்டார் என்கிற சரித்திரமே கிடையாது என்பார். ஆதாயத்திற்காக மட்டுமே நட்பு என்கிற இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு மனிதர்.
எனது நண்பர்களில் எவர் மீது்ம் எனக்கு வெறுப்பு இல்லை என்பார். யாராலும் தமக்குத் துன்பம் வந்ததில்லை என்றும் கூறுவார்.
இவருடன் நட்பாய் இருப்பது எல்லாருக்கும் நல்லது என்று பலரும் பரிந்துரைப்பார்கள். அது உண்மை என்று தெரிந்திருப்பதால்.

No comments:

Post a Comment