U R VISITOR NUMBER

Sunday, 14 July 2013

எது, யார் கையில்?

நானும் நண்பனும் ஒரே நேரத்தில் அந்த வேலையில் சேர்ந்தோம். எங்களுக்குக் குடும்ப ரீதியிலான வசதி வாய்ப்புகளில் பெரிய வித்தியாசம் இல்லை. இருப்பினும் நான் டெரிகாட்டனில் சீருடை எடுத்திருந்தேன். நண்பன் பருத்தித் துணியில்.
காரணம் கேட்டேன்.
”நீ இதே வேலையில் தொடர்ந்து இருப்பாய்.. அதனால் உனக்கு நீண்டு உழைக்கும் சீருடை தேவை. நான் விரைவில் வெளியில் போய்விடுவேன். ஆகவே இது தற்காலிகம்தான்.. இது போதும்”
என்கிற பதில் வந்தது.
பத்து நாட்களுக்குப் பின் நான் அந்த வேலையை விட்டு வெளியேறிவிட்டேன்.
நண்பன் இன்னும் அதே துறையில்..

No comments:

Post a Comment