U R VISITOR NUMBER

Wednesday, 10 July 2013

பதற்றம் தவிர்

நாங்கள் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் உழைத்துக் கொண்டிருந்தார். உழைப்பு என்றால் சாதாரண உழைப்பல்ல. உண்மையாகவே நெற்றிவியர்வை நிலத்தில் விழ உழைப்பார். பார்க்கும்போதெல்லாம் மகிழ்ச்சியாகவே இருப்பார்.
இந்த விண்ணப்பத்தில் மேலொப்பம் வாங்க வேண்டும் என்று போய் நிற்போம். அதற்கென்ன .. வாங்கிவிட்டால் போகிறது என்பார்.
இன்றைக்குக் கடைசி நாள்.
பயப்படாதீங்க..
ஒரு வேளை தாமதமாகிவிட்டால்..?
அதெல்லாம் ஒரு கவலையும் வேண்டாம்..
யாரிடம் வாங்கலாம்..
..ரிடம்..
அவர் அலுவலகம் கிளம்பிவிடுவாரே..
வீட்டிலேயே பிடித்துவிடுவோம்..
----------------------------
உறுதியாகச் சொல்வார். சொன்னபடி முடித்துக் கொடுத்துவிடுவார். எங்களுக்குத்தான் பக்..பக் என்று இருக்கும். அவரோ  அலட்டிக்கொள்ளவே மாட்டார்..எந்தச் சூழ்நிலையிலும்..

No comments:

Post a Comment