U R VISITOR NUMBER

Thursday, 4 July 2013

இனிய மனிதர் ..8

நான் உங்கள் அலுவலகத்திற்கு வந்திருக்கிறேன்.
அப்போது நாங்களே தயாரித்த பால்பாயின்ட் பேனா ரீபில்களை விற்பதற்காக அணுகி இருக்கிறேன்..
என்றார் சி.இராவின் புதல்வர் திரு பாரி.
அப்போது பாரிக்குப் பத்துப் பதினைந்து வயது இருந்திருக்கலாம்.
பார்த்ததாக எங்களுக்கு நினைவில்லை.
கண்டிப்பாக வாங்கியும் இருக்க மாட்டோம். எந்தக் காலத்தில் நாம் உள்ளுார்த் தயாரிப்புகளைப் பொருட்படுத்தி இருக்கிறோம்?
சிஇரா தமது மக்களுக்குச் சூட்டிய பெயர்கள்
பாரி அன்பு அறிவு
பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வையுங்கள் என்று கேட்டுக் கொள்வதையே கூடத் தமது தொண்டுகளில் ஒன்றாக வைத்துக் கொண்டிருக்கிறார் சி.இரா.
சுரேஷ்களும் மகேஷ்களும் கேட்டால்தானே?

No comments:

Post a Comment