அதுஎன் தந்தையார் பணியாற்றிய இடம்
எனக்கு அதுதான் புண்ணிய பூமி
சொந்த ஊருக்கு அருகில் இருந்தும் ஒரு நடை எட்டிப் பார்க்க இயலாமல் இருந்த திருத்தலம்
வயிற்றுப் பாட்டிற்காக வெளியிலேயே சுற்றிக் கொண்டு இருந்துவிட்டேன்.
பற்பல ஆண்டுகளுக்குப் பின் அந்த ஊரைத் தேடிக் கொண்டு போனேன்
முன்பு இருந்த இடம் என்று ஊருக்குள் கை காட்டினார்கள். அங்கு இப்போது வெறும் மண்மேடுதான் இரு்க்கும் என்றும் சொன்னார்கள்.
புதிய இடத்தையே தரிசி்த்தேன்..
குழந்தைகளின் மகிழ்ச்சிக்காகச் சில தின்பண்டங்களை அளித்தோம்..
சற்றைக்கெல்லாம் ஊர் கூடிவிட்டது..
” டேய்..செக் பண்ண வந்திருக்காங்கடா.. இன்னிக்கு... தினம் இல்ல.. அதான் கொடி ஏத்தி இருக்காங்களான்னு பார்க்கறதுக்காக வந்தவங்க இவங்க” என்று சிறுவர்கள் கிசுகிசுத்துக் கொண்டதைக் கேட்க முடிந்தது.
நாங்கள், எங்கள் உடை, வாகனம் ஏற்படுத்திய தாக்கம் அது.
வெளியூரிலிருந்து யார் வந்தாலும் விவகாரத்திற்காகவே வருவார்கள் என்கிற கால காலத்து நம்பிக்கை.
நான் அங்கு சென்றிருந்தது
சனவரி 26 ஆம் நாள்..
ஆமாம்..
இந்தியக் குடியரசு நாள்

No comments:
Post a Comment