U R VISITOR NUMBER

Monday, 1 July 2013

இனிய மனிதர்..5

எதிர்பாராத இடத்தில் எதிர்பாராத நேரத்தில் சந்திப்பது என்பது எல்லாருக்கும் வாய்க்காது.எனக்கு வாய்த்தது. இவர் வெளிநாடு சென்று வந்த கதையை விவரித்தார். கதை கேட்கும் ஆர்வம் யாருக்குத்தான் இல்லை..?
என்ன வித்தியாசம்.. கதைகள் வேறு வேறு விதத்தில் இருக்கும். இது இவரது பயணக் கதை.
இன்ன தேதியில் இந்த இடத்திற்கு வந்தால் எங்கே தங்க முடியும்? நண்பர்கள் வட்டாரத்தில் விசாரிப்பார். தகவல்களைத் திரட்டுவார். முன்னதாகவே தெரிவிப்பார். சொன்னபடி போய் இறங்குவார்.
சிக்கனத்திற்குப் பெயர் பெற்றவர்( பெரியாரின் சீடர் என்பதால் கேட்கவே வேண்டாம்). வெளிநாடுகளில் பணம் கொடுத்து விருந்தினராகத் தங்கும் வசதிகள் ஏராளம். பிரபல விடுதிகளில் தங்குவதை விட இது செலவு குறைவாக ஆகும். இவர் எப்படித் தங்கினார் என்பதைச் சுவைபட விவரிப்பார். நாமே போய் வந்த மாதிரி இருக்கும்.
கதை சொல்லிகள் கவர்ந்திழுப்பது இப்படித்தானே.. இவரிடம் நல்ல பல கதைகள் கிடைக்கும். எண்ணிலடங்காப் பேருந்துகளுக்குச் சொந்தக்காரராக இருந்தவர் எப்படி ஓட்டாணடிஆனார் என்பதை இவர் விவரிக்க ஆரம்பித்தால் அதில் சத்தியமான உண்மை இருக்கும்.. அதனால்தான் அவரிடம் கதை கேட்கப் பிடிக்கிறது. ஆகவே..

No comments:

Post a Comment