அதிகமான எண்ணிக்கையில் தீப்பெட்டிப் படங்களை வைத்திருப்பவன் பணக்காரன். மரம் ஏறத் தெரிந்தவன் சகலகலா வல்லவன். மிதிவண்டி ஓட்டத் தெரிந்தவன் அசகாய சூரன். அதிலும் சொந்தமாக வைத்திருப்பவன் ஒரு படி மேலே. புதிதாக வந்த திரைப்படத்தை நகரத்தில் போய்ப் பார்த்துவிட்டு வந்தவன் உண்மையிலேயே கதாநாயகன்.
கொஞ்சம் வளர்ந்த பின்..
அதிகம் பணம் வைத்திருப்பவன்..
சொந்தக் கார்க்காரன்..
பெரிய வேலையில் இருப்பவன்.
வசதியான மாமனாரைப் பெற்றவன்.
இப்படி எல்லாருமே எல்லாக் காலங்களிலுமே தனிமைப்படுத்தப்பட்டே வருகிறார்கள்.
அவனுக்கு நான் தேவலாம் என்று ஆறுதல்பட்டுக் கொள்வதும்..
அவனுக்கு மச்சம் என்று வெந்து புழுங்குவதும் எங்கேயும் எப்போதும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

No comments:
Post a Comment